புதிதாக மூவருக்கு கொவிட்-19; சமூக அளவில் பாதிப்பில்லை

புதிதாக மூவருக்கு கொவிட்-19; சமூக அளவில் பாதிப்பில்லை

1 mins read
c9cdefe8-e5e5-469d-9535-cf826b970271
-

ஞாயிற்றுக்கிழமையில் புதிதாக மூன்று கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த எண்ணிக்கை 58, 119க்கு உயர்ந்தது.

பாதிக்கப்பட்ட அந்த மூவரும் வெளிநாடுகளில் இந்நோயைத் தொற்றி இங்கு வந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஊழியர் தங்கும் விடுதிகளிலோ சமூகத்திலோ ஐந்தாவது நாளாக தொடர்ச்சியாக எந்தக் கிருமித்தொற்றும் பதிவாகவில்லை.