சிங்கப்பூரின் விநியோகத் தொடரை மேம்படுத்த புதிய திட்டம்

சிங்கப்பூரின் விநியோகத் தொடரை மேம்படுத்த புதிய திட்டம்

2 mins read
e0dc2ab7-d4a6-4e18-b5df-6751b7c3082d
சில சந்தர்ப்பங்களில் விதிமுறை கட்டுப்பாடுகளால் வெவ்வேறு அமைப்புகள் இணைந்து பணியாற்ற முடியாத சூழல் உருவாகலாம். இங்குதான் அரசாங்கம் இவற்றைத் தாண்டி இதனால் ஏற்படக்கூடிய சவாலையும் எதிர்கொண்டு ஒரு திட்டத்தை அதற்கேற்ற வளங்களுடன் செயல்படுத்த முடியும்.- எஸ்.ஈஸ்வரன் தொடர்பு, தகவல் அமைச்சர் -

சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் அமைச்சர் ஈஸ்வரன் உரை

சித­றிக் கிடக்­கும் விநி­யோ­கத் தொடர் குறித்த தக­வல்­கள் வெளிப்­ப­டை­யாக, நம்­ப­கத்­தன்­மை­யு­டை­ய­தாக இருப்­பதை உறுதி செய்­யும் வகை­யில் அதற்­கென ஒரு பொது­வான கட்­ட­மைப்பை உரு­வாக்க புதிய திட்­டம் ஒன்று செயல்­ப­ட­வுள்­ளது.

இதை தனி­யார், அரசு சார்ந்த அமைப்­பு­கள் அடங்­கிய ஒரு குழு மேற்­கொண்டு வரு­வதாக தொடர்பு, தக­வல் அமைச்சர் எஸ்.ஈஸ்­வ­ரன் நேற்று சேண்ட்ஸ் கண்­காட்சி, மாநாட்டு மையத்­தில் நடை­பெற்ற 'இன்­சைட்ஸ்' எனப்­படும் மாநாட்­டில் தெரி­வித்­தார்.

இந்­தக் கட்­ட­மைப்பு அனைத்து இறக்­கு­மதி, ஏற்­று­மதி அமைப்­பு­கள் மற்­றும் கப்­பல் நிறு­வ­னங்­கள், நிதி நிறு­வ­னங்­கள் ஆகி­யவை பயன்­ப­டுத்­தும் தக­வல் தளங்­களை ஒன்­றி­ணைக்­கும்.

இத­னால், ஆவ­ணங்­களை கைப்பட ஆய்வு செய்­வது, அதன் தொடர்­பில் ஏற்­ப­டக்­கூடிய மோச­டிச் சம்­ப­வங்­கள் போன்­றவற்றைக் குைறக்­க­லாம். அதே­ச­ம­யம், கொள்­க­லன்­கள் கையா­ளப்­படும் இடங்­களில் நெரி­சல் குறை­யும் என்­றும் அமைச்­சர் ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

மின்­னி­லக்­க­ம­ய­மா­வ­தில் சிங்­கப்­பூர் நிச்­ச­ய­மற்ற எதிர்­காலத்தை எதிர்­நோக்­கும் இவ்­வே­ளை­யில், இதில் தனி­யார், அரசு சார்ந்த அமைப்­பு­கள் ஒன்றி­ணைந்து செயல்­ப­டு­வ­தன் தேவையை அமைச்­சர் ஈஸ்­வ­ரன் வலி­யு­றுத்­தி­னார்.

"இது கட்­டுப்­பா­டு­க­ளைத் தாண்டி புதிய யோச­னை­கள், மாற்று வழி­கள் பற்றி சிந்­திப்­பது தொடர்­பா­னது. இங்­கு­தான் தனி­யார் துறை அர­சுத் துறை­யு­டன் இணைந்து பணி­யாற்ற வேண்­டி­யி­ருக்­கும்.

"சில சந்­தர்ப்­பங்­களில் விதி­மு­றை கட்­டுப்­பா­டு­க­ளால் வெவ்­வேறு அமைப்­பு­கள் இணைந்து பணி­யாற்ற முடி­யாத சூழல் உரு­வா­க­லாம்.

"இங்குதான் அர­சாங்­கம் இவற்­றைத் தாண்டி இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய சவா­லை­யும் எதிர்­கொண்டு ஒரு திட்­டத்தை அதற்­கேற்ற வளங்­க­ளு­டன் செயல்­படுத்த முடி­யும்," என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

புதிய யோச­னை­களை முன்­வைக்­கும்­போது அவை அர­சாங்­கத்­தால் எவ்­வாறு ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுமோ என்ற தயக்­கம் தனி­யார் துறை­யில் இருப்­பது குறித்­துப் பேசிய அமைச்­சர், அர­சாங்­கம் பொது­வா­கவே ஆக்­க­பூர்­வ­மான சிந்­த­னையை வர­வேற்­றுள்­ள­தைச் சுட்­டி­னார்.

தொழில்­நுட்­பத் துறை­யில் தனி­யார், அர­சுத் துறை ஒத்­து­ழைப்­புக்கு அடித்­த­ள­மாக உள்ள நான்கு அம்­சங்­களில் புதிய சிந்­த­னைப் போக்­குக்கே அர­சாங்­கம் முத­ல் இடம் தரு­வ­தா­கக் கூறிய அமைச்­சர் ஈஸ்வரன், வர்த்­தக ரீதி­யி­லான தீர்­வு­க­ளைக் காணும் புத்­தாக்­கப் போக்கு, யோச­னை­களை செயல்­படுத்­து­வது, மின்­னி­லக்­க­மய­மாவதில் சமு­தா­யத்­தில் உள்ள அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிச் செயல்­ப­டு­வது என மற்ற மூன்று அம்­சங்­க­ளை­யும் பட்­டி­ய­லிட்­டார்.

பொது­வான தக­வல் உள்­கட்­ட­மைப்பை விநி­யோ­கத் தொடர் மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் செயல்­திட்­டத்­திற்­கான கூட்­டணி வழி­ந­டத்­து­கிறது.

பன்­னாட்டு நிறு­வ­னங்­கள், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், அர­சாங்க அமைப்­பு­கள், புதி­தா­கத் தொழில் தொடங்­கிய நிறு­வ­னங்­கள் போன்­றவை இந்­தக் கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்­ளன.

வர்த்­தக, நிதி தக­வல்­களை மின்­னி­லக்­க­ம­ய­மாக்­கு­வ­தி­லும் கொள்­க­லன்­கள் கையா­ளப்­படும் இடங்­களில் நெரி­ச­லைக் குறைப்­ப­தி­லும் இரு முன்­னோட்­டச் சோத­னை­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன.