அமைச்சர் சான்: துல்லிய பொறியியல் துறைக்கு மேலும் ஆதரவு; திட்டம் நீட்டிப்பு

சிங்கப்பூரில் துல்­லி­யப் பொறி­யி­யல் துறை வளர்ந்து வரு­கிறது. அந்­தத் துறைக்கு மேலும் ஆத­ரவு கிடைக்கும் என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் அறி­வித்து இருக்­கி­றார்.

சிறி­யவை பெரி­யவை என்று பாரா­மல் எல்லா நிறு­வ­னங்­க­ளுக்­கும் மட்­டு­மின்றி இதர துறை­களுக்கும் உத­விக்­க­ரம் நீட்டி வந்­துள்ள ஒரு திட்­டம் மேம்­ப­டுத்­தப்­படு­வ­தால் மேலும் உதவி கிடைக்க வழி ஏற்­படும்.

கொவிட்-19 பாதிப்­பு­கள் இருந்­தா­லும் புதிய தொழில்­நுட்­பத் தீர்வு­க­ளுக்­குத் தேவை அதி­க­ரிக்­கிறது. அதன் கார­ண­மாக துல்­லி­யப் பொறி­யி­யல் துறை வளர்ந்து வரு­கிறது. அந்­தத் துறை­யின் ஒட்­டுமொத்த ஏற்­பாட்டையும் பலப்­ப­டுத்­து­வது நோக்­கம் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

திரு சான், வாரா­வா­ரம் தொழில்­துறை நில­வ­ரங்­கள் பற்றி விளக்­கம் அளிக்­கும் நடை­மு­றையையொட்டி நேற்று ஊட­கத்­தி­டம் பேசி­னார்.

ரோட்ஜ் & சுவார்ட்ஸ் என்ற ஜெர்­ம­னி­யின் தொழில்­நுட்­பக் குழு­மத்­திற்கு அமைச்­சர் சென்றார்.

5ஜி தொழில்­நுட்­பங்­கள் வருகை, இணை­யம் மூலம் பல­வற்­றை­யும் செய்­யும் நிலை எல்­லா­ம் தொழில்­நுட்­பத்­து­றை­யில் இடம்­பெ­று­கின்­றன. இவற்­றுக்­கெல்­லாம் துல்­லி­யப் பொறி­யில் துறை பின்­ன­ணி­யில் இருந்து பெரி­தும் உத­வு­கிறது என்று திரு சான் கூறி­னார்.

இந்­தத் துறை­யில் தொடர்ந்து முத­லீடு செய்­தால், மூலா­தார பொறியி­யல் ஆற்­றல்­க­ளைப் பெருக்­கி­னால் இந்த வட்­டா­ரத்­திற்­கும் முழு உல­கிற்­கும் துல்­லியப் பொறி­யி­யல் துறை மையங்­களில் ஒன்­றாக சிங்­கப்­பூர் திக­ழும் என்­ப­தில் ஐய­மில்லை என்றார் அமைச்­சர்.

ஆசி­யா­வின் வளர்ச்சி தொடர்­வதா­லும் வரும் ஆண்­டு­களில் தேவை அதி­க­ரிப்­ப­தா­லும் இந்­தத் துறை­யில் வாய்ப்­பு­கள் மண்­டிக் கிடக்­கும் என்றார் திரு சான்.

துல்­லியப் பொறி­யி­யல் துறை, சென்ற ஆண்­டு­டன் ஒப்­பிடு­கை­யில் இந்த ஆண்­டின் முதல் 10 மாதங்­களில் 10% வளர்ந்­தது.

இந்­தத் துறை­யின் வளர்ச்சி தனிப்­பட்ட நிறு­வ­னங்­களை மட்­டும் பொறுத்து இருப்­ப­தில்லை.

சிறிய, நடுத்­தர நிறுவ­னங்­க­ளின் செயல்­தி­ற­னும் இதில் மிக முக்­கி­யம் என்­ப­தால் அவை பெரிய நிறு­வனங்­க­ளு­டன் சேர்ந்து செயல்­பட வேண்­டும். அதோடு தொடர்ந்து அவை இத்­து­றைக்­குத் தேவைப்­படும் பொறி­யி­யல் ஆற்­றலை பேணி வளர்த்­து­ வ­ர­வேண்­டும்.

இப்­ப­டிச் செய்­தால்­தான் நீண்ட காலப்போக்­கில் வளர்ச்­சி­யைக் கட்டிக்­காக்க முடி­யும் என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

இவற்றை எல்­லாம் கருத்­தில் கொண்டு ‘பேக்ட்’ என்ற திட்­டம் 2022 மார்ச் வரை மேம்­ப­டுத்­தப்­படும். நிறு­வ­னங்­கள் தங்­கள் ஆற்­றலை வளர்த்­துக்­கொள்­ள­வும் மற்­ற­வற்­று­டன் பங்­கா­ளித்­துவ உறவை பேணி வளர்க்­க­வும் இந்­தத் திட்­டம் உத­வு­கிறது.

2010ல் தொடங்­கப்­பட்ட இந்­தத் திட்­டம் மூலம் 1,500க்கும் மேற்பட்ட நிறுவ­னங்­க­ளைச் சேர்ந்த 280க்கும் கூடுதலான திட்­டங்­கள் பலன் அடைந்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!