சிங்கப்பூரில் மேலும் 8 பேருக்கு கொவிட்-19; தேக்கா சென்டர் பரிசோதனையில் வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி

சிங்கப்பூரில் மேலும் 8 பேருக்கு கொவிட்-19; தேக்கா சென்டர் பரிசோதனையில் வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி

1 mins read
77653365-308f-4178-81f4-ec92b85df9e9
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 29) மேலும் 8 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் சேர்த்து இங்கு 58,213 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது.

இன்று கிருமித்தொற்று பதிவானவர்களில் எழுவர் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

ஒருவருக்கு உள்ளுர் சமூகத்தில் கிருமித்தொற்று பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அந்த நபர் உள்ளுர் சமூகத்தில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக அமைச்சு தெரிவித்தது.

கடந்த வியாழக்கிழமை தேக்கா சென்டரில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புப் பரிசோதனைகளில் அவருக்கு முன்பு தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது 'சீரலாஜிகல்' பரிசோதனை முடிவுகளில் அவருக்கு முன்பு தொற்று இருந்தது தெரியவந்தது.

கூடுதல் விவரங்கள் இன்றிரவு வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்