அமைச்சர் சான்: சீரான நிலையில் உணவு, பானத் துறையின் மீட்சி

கொவிட்-19 நெருக்கடிக்கு முன்பிருந்ததைப் போல 70%-80% வருவாய் ஈட்டுகின்றன.

உணவு, பானத் துறை­யின் மீட்சி சீராக இருந்து வருவதாகவும் பல்­வேறு நிறு­வ­னங்­க­ளின் வரு­வாய் கொவிட்-19 தொற்­றுக்கு முன்பு இ­ருந்த நிலை­யில் 70%-80% வரு­வாயை ஈட்டி வரு­வ­தா­க­வும் வர்த்­தக, தொழில் அமைச்­சர் சான் சுன் சுங் தெரி­வித்­துள்­ளார்.

மின்­னி­லக்க முறைக்கு மாறி­யதே உணவு, பானத் துறை­யின் மீட்­சிக்கு முக்­கிய கார­ணம் என்று அமைச்­சர் சான் கூறி­னார்.

ஜூலை மாதத்­தில் சிங்­கப்­பூர் நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டத்­தில் இருந்து வெளி­யான பின்­னும் அதி­க­மான உண­வ­கங்­களும் உண­வுக்­க­டை­களும் இணை­யம் வழி­யாக உணவு, பானங்­களை விற்று வரு­வ­தாக திரு சான் சொன்­னார்.

சுவீ சூன் டிம் சம் உண­வ­கத்­திற்கு நேற்று சென்­றி­ருந்­த­போது அவர் இவ்­வாறு சொன்­னார்.

கடந்த ஜன­வரி மாதம், உண­வுத் துறை­யின் மொத்த விற்­ப­னை­யில் கிட்­டத்­தட்ட 10% இணை­யம் வழி­யாக நடை­பெற்­றது. இந்­நி­லை­யில், நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பி­லி­ருந்த மே மாதத்­தில் அவ்­வி­கி­தம் ஏறத்­தாழ 45 விழுக்­காடாக உயர்ந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

செப்­டம்­ப­ரில் அவ்­வி­கி­தம் ஏறக்­கு­றைய 20 விழுக்­கா­டாக இருந்­தது என்­றும் திரு சான் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் உணவு, பானத் துறை­யின் பங்கு 1.1%. சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யில் 5.5 விழுக்­காட்­டி­னரை அத்­துறை கொண்­டுள்­ளது.

செயல்­தி­றன்­மிக்க வகை­யில் தொழிலை நடத்த, உணவு, பான நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பத்­திற்கு மாற வேண்­டிய தேவையை கொரோனா நெருக்­கடி முடுக்­கி­விட்டு இருப்­ப­தாக திரு சான் கூறி­னார்.

தக­வல் தொழில்­நுட்­பத் தீர்­வு­களைப் பயன்­ப­டுத்த அதி­க­மான உணவு, பான நிறு­வ­னங்­கள் அர­சாங்­கத்­தின் உத­வியை நாடி வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

உற்­பத்­தித்­தி­றன் தீர்­வு­கள் மானி­யம் கோரி கடந்த ஆண்டு ஜன­வரி முதல் அக்­டோ­பர் வரை வந்த விண்­ணப்­பங்­க­ளைக் காட்­டி­லும், இவ்­வாண்­டின் அதே கால­கட்­டத்­தில் நான்கு மடங்­கிற்­கும் அதி­க­மான விண்­ணப்­பங்­கள் வந்­துள்­ளன.

இவ்­வாண்­டில் இது­வரை அம்­மா­னி­யம் கோரி வந்த 2,700க்கும் மேற்­பட்ட விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என்று திரு சான் தெரி­வித்­தார்.

மின்­னி­லக்­கத் தீர்­வு­க­ளைப் பயன்­ப­டுத்த உத­வும் வகை­யில் அர­சாங்­கம் பல்­வேறு திட்­டங்­கள் மூலம் உணவு, பான நிறு­வ­னங்­களுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் என்று அவர் கூறி­னார்.

எடுத்­துக்­காட்­டாக, தொழில்­நிறு­வன மேம்­பாட்டு மானி­யம் மூல­மாக அல்­லது மானி­யத்­து­டன் கூடிய மின்­னி­லக்­கச் சந்­தைப்­ப­டுத்­தல் பாடப்­பி­ரி­வு­கள் மூல­மாக நிறு­வனங்­க­ளுக்கு மின்­னி­லக்­கச் சந்­தைப்­படுத்­தல் ஆத­ரவு வழங்­கப்­படும்.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் திட்­டத்­தின்­கீழ் வரும் பல்­வேறு திட்­டங்­கள் மூலம் நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்த உதவி வழங்­கப்­படும்.

எடுத்­துக்­காட்­டாக, மின்­னி­லக்க மீள்­தி­ற­னுக்­கான ஊக்­கத்­தொகைத் திட்­டத்­தின்­கீழ் உணவு, பான நிறு­வ­னங்­கள் 10,000 வெள்ளி வரை ஊக்­கத்­தொ­கை­யா­கப் பெற­லாம்.

வளர்ச்சி வாய்ப்­பு­க­ளைக் கைப்­பற்ற புதிய வர்த்­தக மாதி­ரி­க­ளைச் சோதித்­துப் பார்க்­க­வும் நிறு­வ­னங்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­தாக அமைச்­சர் சான் கூறி­னார்.

உண­வுத் தொழில்­நுட்­பத்­தை­யும் புத்­தாக்­கங்­க­ளை­யும் முன்­னெ­டுக்க, உணவு, பான நிறு­வ­னங்­க­ளுக்கு வளங்­களை வழங்­கும் ‘ஃபுட்இன்­னொ­வேட்’ திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

அப்­படி நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­க­ம­ய­மாகி, செயல்­மு­றை­க­ளைத் தானி­யக்க முறைக்கு மாற்­று­வ­தன் மூலம், உள்­ளூர்­வா­சி­களை அதி­கம் கவ­ரும் வகை­யில் வேலை­களை மறு­வ­டி­வ­மைக்­க­வும் வாய்ப்­பு­கள் உள்­ளன என்­றும் அதன்­மூ­லம் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைச் சார்ந்­தி­ருக்க வேண்­டி­யது குறை­யும் என்­றும் திரு சான் விளக்­கி­னார்.

கடந்த நவம்­பர் மாத நடுப்­ப­குதி வரை, முப்­ப­துக்­கும் அதி­க­மான உணவு, பான நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த 1,100க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள், சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்­பின் உணவு சேவை­க­ளுக்­கான வேலை மறு­வ­டி­வ­மைப்பு புதுத்­தி­றன் பயிற்­சித் திட்­டத்­தில் இணைந்து புதிய திறன்­க­ளைக் கற்­றுக்­கொண்­ட­னர் அல்­லது கற்று வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!