சுடச் சுடச் செய்திகள்

கல்வி அமைச்சின் நான்கு உத்திகள்

கொவிட்-19 பரவலுக்குப் பிந்திய சூழலுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்த நடவடிக்கை

கொவிட்-19 தொற்­றுக்­குப் பிந்­திய சூழ­லுக்கு மாண­வர்­களை ஆயத்­தப்­ப­டுத்த தமது அமைச்சு நான்கு முக்­கிய உத்­தி­க­ளைக் கையா­ளும் என கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்து இருக்­கி­றார்.

வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்­கான வாய்ப்­பு­களை அதி­கப்­ப­டுத்­தல், மாண­வர்­க­ளின் திற­மை­களைப் பட்டை தீட்ட பல வழி­முறை­களை உரு­வாக்­கு­தல், புத்­தக அறி­வைத் தாண்டி மனப்­பாங்­கை­யும் திறன்­களை­யும் வளர்த்­துக்­கொள்ள உதவு­தல், பல­து­றைக் கற்­ற­லில் அதிக கவ­னம் செலுத்­து­தல் ஆகி­ய­வையே அந்­நான்கு உத்­தி­கள்.

“இணை­யம் வழி­யா­கப் பொருள் வாங்­கு­தல், மின்­னி­லக்­கப் பொழுது­போக்கு, மெய்­நி­கர் தொடர்­பு­கள், மெய்­நி­க­ராக முன்­னி­லை­யா­தல் போன்ற போக்­கு­க­ளைக் கைக்­கொள்­வது தொடர்ந்து அதி­க­ரிக்­கும். கொவிட்-19 பர­வல் ஓய்ந்த பிற­கும் இப்­போக்­கு­கள் உறு­தி­யா­கத் தொட­ரும்,” என்று அமைச்­சர் வோங் சொன்­னார்.

“பல்­வேறு நாடு­க­ளி­லும் பல்­வேறு துறை­க­ளி­லும் மீட்சி சம­மாக இல்லை. கொரோனா நெருக்­க­டிக்­குப் பின்­ன­ரும் நமது வாழ்க்­கை­மு­றை­யில், வேலை­யில், கலந்­து­ற­வா­டு­வ­தில் அதன் விளை­வு­கள் நீடிக்­கும்,” என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் 115வது ஆண்டு நிறை­வுக் கொண்­டாட்­டத்தை ஒட்டி ஏற்­பாடு செயப்­பட்­டுள்ள இணை­யக் கருத்­தரங்­குத் தொட­ரின் முத­லா­வது அமர்வு நேற்று இடம்­பெற்­றது. அதில் கலந்­து­கொண்ட அமைச்­சர் வோங், ‘எதிர்காலத்தில் கல்வி’ குறித்­துப் பேசி­னார்.

‘எதிர்­கா­லத்தை வடி­வ­மைப்­போம்’ எனும் கருப்­பொ­ரு­ளு­டன் கூடிய இந்த ‘என்­யு­எஸ்115’ சிறப்­புப் பேச்­சா­ளர் தொடர், அடுத்த ஆண்­டின் நடுப்­ப­குதி அல்­லது மூன்­றாம் காலாண்டு வரை நீடிக்­கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்­கான வாய்ப்­பு­களை அதி­கப்­ப­டுத்த இடம்­பெற்று வரும் முயற்­சி­களை இரட்­டிப்­பாக்­கு­வது கல்வி அமைச்­சின் முதல் உத்தி என்­றார் திரு வோங்.

“வாழ்க்­கை­யின் தொடக்­கக் காலத்­தில் வேறு­பா­டு­க­ளைக் களைந்து, குழந்­தை­க­ளுக்கு முழு­மை­யான, பொருத்­த­மான சுகா­தார, கற்­றல், வளர்ச்சி ஆத­ரவு வழங்கு­வதற்கு அதிக முத­லீடு செய்ய விரும்­பு­கி­றோம்,” என்று அவர் கூறி­னார்.

மாண­வர்­க­ளின் திற­மை­க­ளைப் பட்டை தீட்­டு­வ­தற்­கான பல வழி­மு­றை­க­ளைக் கல்வி நிலை­யங்­கள் கொண்­டி­ருப்­ப­தை­யும் தொடர்ந்து அவற்றை உரு­வாக்­கு­வ­தை­யும் உறுதிப்­ப­டுத்­து­வது கல்வி அமைச்­சின் இரண்­டா­வது உத்தி.

“ஒவ்­வொரு குழந்­தைக்­கும் ஒரு தனித்­தன்மை இருக்­கும் என்­பதை நாம் உணர்ந்­துள்­ளோம். அவர்­கள் கற்­க­வும் வள­ர­வும் உதவ வெவ்­வேறு அணு­கு­மு­றை­கள் நமக்­குத் தேவைப்­ப­டு­கின்­றன,” என்­றார் அமைச்­சர் வோங்.

மூன்­றா­வ­தாக, மாண­வர்­கள் புத்­தக அறி­வைத் தாண்­டி­யும் வேறு மனப்­பான்­மை­யையும் திற­மை­க­ளை­யும் வளர்த்­துக்­கொள்ள வேண்­டி­ உள்­ளது என அவர் குறிப்­பிட்­டார்.

“நமது சாத­க­மான போட்­டித்­தன்­மை­யை­யும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உறவை வளர்த்­துக்­கொள்­வது, குழுக்­க­ளாக இணைந்து பணி­யாற்­று­வது, ஆக்­க­பூர்­வ­மா­கச் சிந்­திப்­பது போன்ற நமது பலங்­க­ளை­யும் தொடர்ந்து வலி­யு­றுத்­து­வதே நம்மை முன்­னெ­டுத்­துச் செல்­லும்,” என்று அவர் எடுத்­து­ரைத்­தார்.

தொடக்­கப் பள்­ளி­யில் இருந்தே மாண­வர்­கள் இப்­பண்­பு­களை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்ற அவர், அதற்­கே­து­வாக சில குறிப்­பிட்ட ஆண்­டு­களில் மதிப்­பீடு­க­ளை­யும் தேர்­வு­க­ளை­யும் ரத்து செய்து, அதற்­கான நேரத்­தை­யும் சூழ­லை­யும் அமைச்சு ஏற்­ப­டுத்­தித் தரு­கிறது என்­றும் சொன்­னார்.

வாழ்க்­கைத்­தொ­ழி­லுக்கு ஆத­ர­வ­ளித்து, மாறி வரும், நிச்­ச­ய­மில்லா எதிர்­கா­லத்­திற்­குச் சிங்­கப்­பூ­ரர்­க­ளைத் தயார்ப்­ப­டுத்­தும் நோக்­கில் ஒன்­றுக்கு மேற்­பட்ட துறை­களில் கற்­றலை ஊக்­கு­விப்­பது அமைச்­சின் நான்­கா­வது முக்­கிய உத்தி.

அதே நேரத்­தில், அதில் சரி­யா­ன­தொரு சம­நிலை பேணப்­பட வேண்­டி­யது அவ­சி­யம் என அமைச்­சர் சுட்­டி­னார்.

“ஒரு முனை­யில் இருந்து இன்­னொரு முனைக்­குத் தள்­ளி­விட விரும்­ப­வில்லை. நிபு­ணத்­து­வப் பாடம் என்­பது இப்­போ­தும் எப்­போ­தும் முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கும்,” என்று திரு வோங் தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon