ஜூரோங் தீவில் வெளிநாட்டு ஊழியர் என நம்பப்படும் மொத்தம் 21 பயணிகள் இருந்த பேருந்துடன் கார் ஒன்று மோதியதை அடுத்து அந்தப் பயணிகள் மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் ஜூரோங் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சுயநினைவுடன் இங் டெங் ஃபொங் மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்..
இந்த விபத்தில் பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்ததாகவும் காரின் முற்பாதி நொறுங்கி கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தக் காரின் 42 வயது ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

