சிங்கப்பூர்-சீனா பலதுறை ஒத்துழைப்பு இணக்கம்

2 mins read
1b2c3e01-651b-4411-a89b-fda1eac2e109
சிங்கப்பூர்-சீனா இருதரப்பு ஒத்துழைப்பு மன்றத்தின் 16வது கூட்டத்திற்கு சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், (இடது) சீன துணைப் பிரதமர் ஹான் ஸெங் (வலது) இருவரும் சேர்ந்து தலைமை தாங்கினர். இந்தக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், தொடர்பு தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் ஆகியோரும் சிங்கப்பூர் சார்பில் கலந்துகொண்டனர். படம்: தொடர்பு தகவல் அமைச்சு -

சிங்­கப்­பூர்- சீனா இரு­த­ரப்பு ஒத்­துழைப்பு மன்றத்தின் 16வது கூட்டுக் கூட்­டத்­தில் உரை­யாற்­றிய துணைப் பிர­தமர், பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார். இரு நாடு­க­ளுக்­கும் இடைப்­பட்ட ஆக உய­ரிய இரு­த­ரப்புத் தள­மாக இந்­தக் கூட்­டம் கரு­தப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ ­ரும் சீனா­வும் பொதுச் சுகா­தா­ரம் போன்ற பல புதிய துறை­களில் ஒன்­றா­கச் சேர்ந்து பாடு­பட்டு வரு­வ­தாக துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்தார். இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் இணைப்­புக் கட்­ட­மைப்பை ஆழப்­ப­டுத்தி அக­லப்­ப­டுத்­தும் வழி­களை இவ்­விரு நாடு­களும் உரு­வாக்கி வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

நிதி அமைச்­ச­ரும் பொரு­ளி­யல் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கிணைப்பு அமைச்­சருமான திரு ஹெங்­கும் சீன துணைப் பிர­த­மர் ஹான் ஸெங்கும் அந்­தக் கூட்­டத்­துக்குத் தலைமை தாங்­கி­னர். சுகா­தா­ரம், உண­வுப் பாது­காப்பு, சுற்­றுப்­பு­றம் போன்ற துறை­களில் 10 உடன்­பா­டு­களும் புரிந்­து­ணர்வு குறிப்­பு­களும் நேற்று கையெ­ழுத்­தி­டப்­பட்­டன.

சீனா­வின் கடல், தரை­வழி செயல்­திட்­டம், பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு, வர்த்­த­கம், புத்­தாக்­கம், நிதி ஒத்­து­ழைப்பு, பொது சுகா­தார ஒத்­து­ழைப்பு, இரு நாட்டு மக்­க­ளுக்­கும் இடை­யில் பரஸ்­பர வருகை பரி­மாற்­றங்­கள், பொரு­ளி­யல் வளர்ச்­சி­யு­டன் இயற்கை வளங்­க­ளை­யும் கட்­டிக்­காத்து மேம்­ப­டு­வது ஆகி­ய­வற்­றில் இடம்­பெ­றக்­கூ­டிய இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை இரு தலை­வர்­களும் மறு­ப­ரி­சீ­ல­னை செய்­த­தாக பிர­த­மர் அலு­வ­ல­கத்­தின் அறிக்கை நேற்று குறிப்­பிட்­டது.

'சீனா-சிங்­கப்­பூர் குவாங்சு அறி­வுப் பெட்டக நகர்' என்ற திட்­டம் பற்­றி­யும் இரு­த­ரப்பு தலை­வர்­களும் விவா­தித்­த­னர். இத்­திட்­டம் இரு நாடு­க­ளின் அர­சாங்க நிலை­யில் இடம்­பெ­றக்­கூ­டிய இரு­தரப்பு ஒத்­து­ழைப்­புத் திட்­ட­மா­கும்.

கொவிட்-19க்குப் பிந்­தைய உல­கில் இணைப்­புக் கட்­ட­மைப்பு, மின்­னி­லக்­க­மயம், பொரு­ளி­யல் வளத்­து­டன் இயற்கை வளங்­க­ளை­யும் கட்­டிக்­காப்­பது ஆகிய துறை­கள் இரு நாடு­களும் ஒத்­து­ழைக்க மிக முக்­கிய துறை­கள் என்றாரவர்.

சிங்­கப்­பூ­ரின் தொடர்பு தக­வல் அமைச்­சும் சீனா­வின் ஷென்­சென் மாந­க­ராட்சி அர­சாங்­க­மும் சென்ற ஆண்டு 'சிங்­கப்­பூர்-சீனா அறி­வார்ந்த நகர் திட்­டம்' என்ற ஒரு திட்­டம் தொடர்­பி­லான புரிந்­து­ணர்­வுக் குறிப்­பில் கையெ­ழுத்­திட்­டன. இது பற்றி நேற்­றைய கூட்­டத்­தில் தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ் ஈஸ்­வரன் குறிப்­பிட்­டார்.

புரிந்­து­ணர்­வுக் குறிப்பு கையெ­ழுத்­தா­ன­தற்­குப் பிறகு மின்­னி­லக்க வர்த்­த­கம், எல்லை கடந்த கணி­னித் தக­வல் ஆளுமை, புத்­தாக்­கம், தொழில்­மு­னைப்பு போன்ற துறை­களில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றம் சாதிக்­கப்­பட்டுள்ளதாக திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

கொவிட்-19 சூழ­லில் குறு­கியகால விமானப் பயண ஏற்­பா­டு­கள், விமா­னச் சேவை­களை அதி­க­ரிப்­பது, இரு நாட்டு மக்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்­பு­களை வழமை நிலைக்குக் கொண்டு வரு­வது முத­லா­ன­வற்றைப் பொருத்­த­மான காலத்­தில் எப்­படி சாதிக்­க­லாம் என்­பது பற்றி சிங்­கப்­பூ­ரும் சீனா­வும் விவா­திக்­கும் என்­றும் திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

இருதரப்பு மக்களின் சுகாதாரப் பாது காப்புக்கு, பொதுச் சுகா­தா­ரத் துறை­யில் இரு நாடு­களும் அணுக்­க­மா­கப் பாடு­பட்டு ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்த வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்று நேற்­றைய கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் கூறி­னார்.