சிங்கப்பூர் பொருளியல் 5.5 % வரை வளர்ச்சி காணலாம்

2 mins read
94b893dc-e181-4390-abfe-c56375f872dc
-

சிங்கப்பூரின் பொருளியல் அடுத்த ஆண்டு 5.5 விழுக்காடு வரை வளர்ச்சி காணும் மத்திய வங்கியின் ஆய்வு முன்னுரைத்துள்ளது. இதன்மூலம் சிங்கப்பூரின் ஆக மோசமான பொருளியல் வீழ்ச்சி நிலை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா கொள்ளைநோயைத் தடுப்பூசி மருந்துமூலம் உலகளவில் கட்டுப்படுத்த முடியும் என்றால், வளர்ச்சி வி

கிதம் இன்னும் அதிகமாக இருக்கும் என மத்திய வங்கி கூறியது. இந்த முன்னுரைப்பு சிங்கப்பூர் நாணய ஆணையத்தைச் சேர்ந்த 23 பொருளியல் வல்லுநர்கள், ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது. நான்கு முதல் 5.9 விழுக்காடு வரை இருக்கும் என்று முன்னர் கணிக்கப்பட்டிருந்த 2021ன் பொருளியல் வளர்ச்சி தற்போது 5 முதல் 5.9% வரை இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. வர்த்தக தொழில் அமைச்சு நவம்பர் மாதம் அடுத்த ஆண்டின் வளர்ச்சி 4 முதல் 6% வரை இருக்கும் என்று முன்னுரைத்திருந்தது. தற்போது இந்த தனியார் துறை முன்னுரைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 விழுக்காடு வரை சுருங்கலாம் என்று நிபுணர்களின் ஆய்வு குறிப்பிட்டுள்ளது. அமைச்சு 6.5 முதல் 6% வரை சுருங்கும் எனக் கணித்துள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 4.5% சுருங்கும் என்று வல்லுநர்கள் முன்னுரைத்துள்ளனர். மூன்றாம் காலாண்டில் இது 5.8% சரிந்தது.வேலை சந்தையைப் பொறுத்தவரை, வேலையின்மை விகிதம் 2020ஆம் ஆண்டின் இறுதியில் 3.7 விழுக்காட்டை எட்டும் என எதிர்பார்க்கிறார்கள். இது முந்தைய ஆய்வில் 3.5% ஆக இருந்தது.

பயனீட்டாளர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் -0.3 விழுக்காடும் மூலாதாரப் பணவீக்கம் -0.2% இருக்கும் என கணிக்கப்படுகிறது. கொள்ளைநோய் கட்டுப்படுத்தப்படுதலைப் பொருத்து அடுத்த ஆண்டின் பொருளியல் வளர்ச்சி நிலை இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

புதிய தொற்றுப் பரவல், தடுப்பூசி மருந்து தயாரிப்பில் தாமதம் போன்ற காரணங்களால் நிலைமை மோசமானால் பொருளியலும் பாதிக்கப்படலாம். ஆய்வில் பங்கேற்றவர்களில் 88.9 விழுக்காட்டினர் பேர் இந்த அச்சுறுத்தலை அடையாளம் கண்டுள்ளனர், அவர்களில் 72.2 விழுக்காட்டினர் பொருளியல் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.