சிங்கப்பூரில் ஆய்வு, புத்தாக்கத்திற்கு $25 பி. மதிப்பிலான வரைவுத் திட்டம்

ஆய்வு, புத்தாக்க முயற்சிகளுக்காக $25 பில்லியன் மதிப்பிலான ஐந்தாண்டு வரைவுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நெருக்கடியில் இருந்து மீண்டு பொருளியலை வலுப்படுத்தவும் எதிர்கால அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் இத்திட்டம் உதவும்.

எதிர்காலத்தில் தொற்றுநோய் எதுவும் பரவும் பட்சத்தில் அதில் இருந்து சிங்கப்பூர் விரைந்து மீள உதவும் தேசிய அளவிலான திட்டமும் அதிலடங்கும்.

கொவிட்-19 நோய்ப் பரவலானது உலகப் பொருளியலை மாற்றி அமைக்கக்கூடிய தொழில்நுட்பப் போக்குகளையும் கட்டமைப்பு மாற்றங்களையும் முடுக்கிவிட்டுள்ளது என்றும் சமுதாயங்களுக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

‘ஆய்வு, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைப்பு (ஆர்ஐஇ) 2025 திட்டம்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது திரு ஹெங் இவ்வாறு கூறினார்.

சுகாதாரம், நீடித்த நிலைத்தன்மை, மின்னிலக்கப் பொருளியல், உற்பத்தி ஆகிய நான்கு முக்கிய துறைகளில் இந்த ஐந்தாண்டு வரைவுத் திட்டம் மிகுந்த கவனம் செலுத்தும்.

திட்டத்திற்கான தொகையில் மூன்றில் ஒரு பங்கு அடிப்படை ஆய்வுப் பணிகளுக்குச் செலவிடப்படும் என்றும் அதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் உடனடியாகத் தெளிவாகத் தெரியாமல் போகலாம் என்றும் கூறப்பட்டது.

மனிதச் சுகாதாரமும் ஆற்றலும், உற்பத்தி, வர்த்தகம் மற்றும் இணைப்பு, நகர்ப்புறத் தீர்வுகளும் நீடித்த நிலைத்தன்மையும், அறிவார்ந்த தேசமும் மின்னிலக்கப் பொருளியலும் ஆகியவை இந்த ‘ஆர்ஐஇ2025’ திட்டத்தின் நான்கு முக்கிய அம்சங்கள்.

பரந்துபட்ட தேசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஒவ்வோர் அம்சத்தினுடைய பரப்பெல்லையும் விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சருமான திரு ஹெங் கூறினார்.

மேற்குறிப்பிட்ட நான்கு முக்கிய துறைகள் தவிர்த்து, மற்ற துறைகளுக்கு ஒதுக்கப்படும் தொகை $3.75 பில்லியனாக அதிகரிக்கப்படும். அடுத்த சில ஆண்டுகளில் உருவெடுக்கும் புதிய அல்லது வளர்ந்து வரும் துறைகளின் ஆய்வுப் பணிகளுக்காக அத்தொகை செலவிடப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!