டாக்சி, வாடகை கார் ஓட்டுநர்களுக்கு கூடுதல் உதவி

கொவிட்-19 சூழலால் வருமானம் குறைந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டாக்சி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு புதிய திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மாதம் 600 வெள்ளி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுயதொழிலில் ஈடுபட்ட இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணத் தொகை முடிவுக்கு வருவதால் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய உதவித் தொகை பற்றிய விவரங்களை இன்று நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டது.

குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும் தகுதி பெற்ற டாக்சி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் $600 வெள்ளி வழங்கப்படும் என்று ஆணையம் கூறியது.

இது, இதற்கு முன்பு வழங்கப்பட்ட 300 வெள்ளியைவிட $300 அதிகம்.ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இைடயே இந்த உதவித் தொகை மாதம் 450 வெள்ளியாகக் குறைக்கப்படும்.

‘கொவிட்-19 ஓட்டுநர் மீட்பு நிதி’ என்று அழைக்கப்படும் புதிய உதவித் திட்டத்திற்கு $133 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது.

சிறப்பு நிவாரணத் திட்டத்துக்கு மாறாக இது அமைகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து நிவாரணத் திட்டத்தின்கீழ் ஓட்டுநர்கள் உதவி பெற்று வருகின்றனர்.

தற்போதைய வழங்குதொைகயோடு சேர்த்து இத்துறையினருக்கு வழங்கப்படும் நிதியுதவியின் மொத்த மதிப்பு 380 மில்லியன் வெள்ளியாகும்.

புதிய திட்டத்தின்கீழ் நிதியுதவி பெறும் ஓட்டுநர்கள் முன்பு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அறிவித்த கொவிட்-19 மானியத் திட்டத்திற்கு தகுதி பெற மாட்டார்கள்.

புதிய திட்டத்தின் மூலம் சுமார் 52,000 டாக்சி ஓட்டுநர்களும் வாடகை கார் ஒட்டுநர்களும் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் கொவிட்-19 சூழ் நிலை மேம்பட்டு வருவதாகக் கூறிய ஆணையம், வீட்டில் இருந்து பலர் வேலை செய்வதாலும் பயணத்துறை அமைதியாக இருப்பதாலும் டாக்சி மற்றும் வாடகை கார்களுக்கான பயணங்கள் குறைவாகவே இருக்கிறது என்று தெரிவித்தது.

தற்போதுள்ள நிலைமையைக் கண்காணித்து ஓட்டுநர்களின் வருமானம், வாழ்வாதாரங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று ஆணையம் மேலும் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!