மொடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு இத்தகைய அனுமதியைப் பெறும் இரண்டாவது தடுப்பு மருந்து இது.
அவசரகால பயன்பாட்டுக்கு மொடர்னாவின் கொவிட்-19 தடுப்பூசி மருந்தை அனுமதிக்குமாறு அமெரிக்காவின் நிபுணர் குழு பரிந்துரைத்ததை அடுத்து அமெரிக்க இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
மில்லியன் கணக்கான மோடர்னா தடுப்பு மருந்து அமெரிக்காவுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பயன்பாடு அங்கு தொடங்கியுள்ளது.
முதலில் சுகாதாரப் பராமரிப்புத் துறை பணியாளர்களுக்கும் பின்னர் நீண்டகால பராமரிப்பு வசதிகளில் இருப்போருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொடர்னா தடுப்பு மருந்து பற்றி நிபுணர் குழுவிடம், "அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் 18 வயதுக்கும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கும் மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டால், அதன் பலன்கள் அதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை மிஞ்சுவதாக உள்ளனவா? என்று கேட்கப்பட்டது.
அதற்குக் குழுவில் இருந்த ஒருவரைத் தவிர மற்ற 20 பேரும் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
சென்ற வாரம் இதே போல் 'ஃபைசர்-பயோடெக்' தடுப்பூசி மருந்துக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்ததை விட 'மொடர்னா' தடுப்பூசிக்குக் கூடுதல் ஆதரவு இருந்ததைப் பற்றி கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கிய தொற்றுநோய் நிபுணர் ஆர்னல்டு மொன்டோ கூறினார்.
கிருமித்தொற்றால் உலகிலேயே ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 310,000ஐ தாண்டிவிட்ட நிலையில் நிபுணர்கள் இச்சந்திப்பை நடத்தியுள்ளனர். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17 மில்லியனுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் மொடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் முதல் நாடாக அமெரிக்கா இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வாரம் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் நீண்டகால பராமரிப்பில் உள்ள இல்லவாசிகளும் 'ஃபைசர்' தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.


