சிட்னி: நடனம், பாட்டு நிகழ்ச்சிகளுக்குத் தடை

சிட்னி: நடனம், பாட்டு நிகழ்ச்சிகளுக்குத் தடை

2 mins read
66c0aa53-dfcd-4b1a-919f-ff1c3f2c180f
சிட்னி உள்நாட்டு விமான நிலையத்தில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டம். படம்: இபிஏ -

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நகரில் மீண்­டும் ஏற்­பட்­டுள்ள கிரு­மித் தொற்­றுப் பர­வ­லைக் கட்டுப்­படுத்த அதி­கா­ரி­கள் பாடு­பட்டு வரும் வேளை­யில், நேற்று முதல் அங்கு செயல்­பாட்­டுக்கு வந்த புதிய கட்­டுப்­பா­டு­கள் உள்­ள­ரங்க இடங்­களில் நட­னம், பாடு­தல் ஓதுதல் ஆகிய நட­வ­டிக்­கை­களைத் தடை செய்­கிறது.

சிறிய அள­வி­லாக திரு­ம­ணம், சமய சேவை­கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றன.

சிட்­னி­யின் வடக்கு கடற்­க­ரைப் பகு­தி­களில் நூறா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் முடக்­க­நி­லை­யின் முதல் நாளை எதிர்­கொண்­ட­ நி­லை­யில் நேற்று அங்கு மேலும் 30 புதிய தொற்­று­கள் பதி­வா­கின. இது சிட்­னி­யில் வியா­ழன் அன்று ஏற்­பட்ட தொற்று எண்­ணிக்­கையை 68 ஆக உயர்த்தியுள்ளது.

பல கடற்­கரை புற­ந­கர்ப் பகுதி­களில் வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய கிரு­மிப் பர­வ­லைத் தொடர்ந்து, ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மற்ற மாநி­லங்­கள் இப்­ப­கு­தி­களுக்கு பய­ணக் கட்­டுப்­பா­டு­களை விதிக்­கத் தொடங்­கி­யுள்­ளது.

விக்­டோ­ரியா, தெற்கு ஆஸ்­தி­ரே­லியா ஆகி­யவை 'கிரேட்­டர்' சிட்னி, வடக்கு கடற்­க­ரைப் பகு­தி­யைச் சேர்ந்­தோ­ருக்கு எல்­லை­களை மூடி­விட்­டது. சிட்­னி­யி­லி­ருந்து வரு­வோ­ருக்கு 14 நாட்­கள் தனி­மைப்­ப­டுத்­தலை நேற்று முதல் அறி­வித்­துள்­ளன.

இத­னால் நேற்று சிட்னி உள்­நாட்டு விமான நிலை­யம் மிக­வும் பர­ப­ரப்­பா­கக் காணப்­பட்­டது.

கிறிஸ்து­மஸ் விடு­மு­றைப் பய­ணங்­களை மேற்­கொள்­வோர் பய­ணத்­த­டைக்கு முன்­னர் சிட்னி செல்­லவோ அல்­லது அங்­கி­ருந்து வெளி­யே­றவோ அவ­ச­ரப்­பட்­ட­னர்.

இதற்­கி­டையே, சிட்­னிக்­கும் டாஸ்­மே­னி­யா­வின் ஹோபார்ட்­டுக்­கும் இடை­யே­யான 76வது பட­கோட்­டும் போட்டி முதல்­மு­றை­யாக ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. 1945 முதல் நடை­பெற்று வந்த சிட்­னிக்­கும் டாஸ்­மே­னி­யா­வுக்­கும் இடை­யி­லான சுமார் 630 கடல்­மைல் தூரத்தைக் கடக்­கும் இந்தப் பட­குப்­போட்டி ஆண்­டு­தோ­றும் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்­கும்.