பண்டிகைக் காலத்தில் அன்பைப் பகிரும் சமூக முயற்சி

கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்த கிறிஸ்மஸ் சமயத்தில் எங்கேயும் செல்ல முடியாமல் சில குடும்பங்கள் இருக்கலாம்.

குறிப்பாக, சிறுவர்கள் இதுபோன்ற கொண்டாட்டங்களுக்காக எதிர்பார்த்துக் காத்திருப்பர்.

இவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வர சத்ய சாய் அனைத்துலக அமைப்பும் (சிங்கப்பூர்) சன்லவ் இல்லமும் சேர்ந்து ஒரு நன்கொடை அன்பளிப்பு விநியோக முயற்சியில் ஈடுபட்டன.

தீவு முழுவதும் சிறுவர்கள் இருக்கும் 100 வசதி குறைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, நேரடியாக கிறிஸ்மஸ் தாத்தாவையே அங்கு அனுப்பி அன்பளிப்புப் பைகளை இவை வழங்கின.

“கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்பாடுகளால், வெளியே செல்ல இயலாத சில குடும்பங்களுக்கு கிறிஸ்மஸ் கொண்டாட்ட உணர்வைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் இம்முயற்சியில் இறங்கினோம்,” என்று தெரிவித்தார் சன்லவ் இல்லத்தின் தலைமைத் திட்ட அதிகாரி திரு க.ராஜமோகன்.

டெப்போ சாலையில் அமைந்து உள்ள ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலய வளாகத்தில் இம்மாதம் 19, 20ஆம் தேதிகளில் தொண்டூழியர்கள் அன்பளிப்புப் பைகளை நிரப்ப உதவினர்.

ஒவ்வொரு பையிலும் $50 மதிப்புள்ள பேரங்காடிப் பற்றுச்சீட்டு, பிஸ்கெட், ‘நட்டேலா’ சாக்லெட், ரொட்டி, ‘நூடல்ஸ்’, ‘மைலோ’, பள்ளிக்குத் தேவையான எழுதுப் பொருட்கள் என தலா $120க்கு மதிப்புள்ள பொருட்கள் அடங்கி இருந்தன.

கடந்த டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களாக இயோ சூ காங், அட்மிரல்ட்டி, உட்லண்ட்ஸ், பொங்கோல், ஹவ்காங் போன்ற வெவ்வேறு இடங்களுக்கு வாகனம் வழி பயணம் செய்து, குடும்பங்களுக்கு வாழ்த்துக் கூறி, அன்பளிப்புப் பைகளை வழங்கினர் இவ்விரு அமைப்புகளின் தொண்டூழியர்கள்.

முயற்சியில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களில் ஒருவரான 63 வயது திரு சு.ராஜசேகரன், பிறரை மகிழ்விப்பதில் ஒருவித ஆனந்தம் கிடைக்கிறது என்றும் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து வெவ்வேறு அமைப்புகளால் மேற்கொள்ளப்படுவது ஆதரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

“இந்த கொவிட்-19 கிருமித்தொற்று சமயத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவது முக்கியம். கிறிஸ்மஸ் சமயத்தில் அன்பை வெளிப்படுத்தும் முயற்சியாக இது விளங்குகிறது,” என்றார் திரு ராஜசேகரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!