தென்கொரியாவில் இருந்து வருவோருக்குப் புது உத்தரவு

2 mins read

பிரத்தியேக இடங்களில் 14 நாள்கள் தங்கியிருக்க வேண்டும்

கடைசி இரு வாரங்­க­ளா­கத் தென்­கொ­ரி­யா­வில் இருந்­த­பின் சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள் அனை­வரும் பிரத்­தி­யேக இடங்­களில் 14 நாள்­க­ளைக் கழிக்­கும் வகை­யில், அவர்­க­ளுக்கு வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும்.

இந்­தப் புதிய நட­வ­டிக்கை நாளை இரவு 11.59 மணி­யில் இருந்து நடை­மு­றைக்கு வரும் என்று சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

தென்­கொ­ரி­யா­வில் கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தையடுத்து, இந்நட­வ­டிக்கை இடம்­பெ­று­கிறது.

சிங்­கப்­பூர்-தென்­கொ­ரியா இரு­த­ரப்­புப் பயண ஏற்­பாட்­டின்­கீழ் தென்­கொ­ரியா சென்­று­விட்டு சிங்­கப்­பூர் திரும்­பு­வோர்க்­கும் இப்­பு­திய விதி பொருந்­தும். சமூ­கத்­தில் கொரோனா தொற்­றும் அபா­யம் கார­ண­மாக அத்­த­கைய பய­ணி­களும் இந்­தப் புதிய விதிக்கு உட்­பட்­டாக வேண்­டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மாதம் 2ஆம் தேதி, தென்­கொ­ரி­யா­வில் இருந்து வரும் பய­ணி­கள் 14 நாள்­கள் வீட்­டி­லேயே தங்­கி­யி­ருப்­ப­தற்­கான உத்­த­ரவை தங்­க­ளது வசிப்­பி­டங்­களில் நிறை­வேற்ற அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

ஹாங்­காங், இலங்கை, ஃபிஜி, தாய்­லாந்து ஆகிய நாடு­களில் இருந்து வரு­வோர் பிரத்­தி­யேக இடங்­க­ளுக்­குப் பதி­லாக தங்­க­ளது வசிப்­பி­டங்­க­ளி­லேயே 14 நாள்­கள் தங்­கி­யி­ருப்­ப­தற்­கான உத்­த­ரவை நிறை­வேற்ற அனு­ம­திக்­கும்­படி விண்­ணப்­பிக்­க­லாம் என சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது.

இருப்­பி­னும், அவர்­கள் சிங்­கப்­பூ­ரில் நுழை­வ­தற்­கு­முன் கடைசி 14 நாள்­களை ஆஸ்­தி­ரே­லியா, புருணை, மக்­காவ், சீனா, நியூ­சி­லாந்து, தைவான், வியட்­னாம் போன்ற நாடு­களில் கழித்­தி­ருக்­கக்­கூ­டாது என்­பதை அவர்­கள் உறு­தி­செய்ய வேண்­டும்.

அத்­து­டன், தங்­க­ளது வசிப்­பிடங்­களில் தங்­க­ளைத் தவிர வேறு எவ­ரும் தங்­கி­யி­ருக்­கக்­கூடாது எனும் நிபந்­த­னை­யை­யும் அவர்­கள் பூர்த்தி செய்­ய­வேண்­டி­யது அவ­சி­யம்.

வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்க வேண்­டிய காலம் நிறை­வு­று­வ­தற்கு­முன் அவர்­க­ளி­டம் கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­படும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

"உல­கில் கொரோனா தொற்று அதி­க­ரித்து வரு­வ­தால், வெளி­நாடு­களில் இருந்து வரு­வோர் மூல­மா­க­வும் சமூ­கத்­தி­லும் அந்­நோய்த்­தொற்று பர­வும் அபா­யத்தை எதிர்­கொள்­ளும் வகை­யில் எல்­லைக் கட்­டுப்­பா­டு­களில் தொடர்ந்து மாற்­றங்­கள் மேற்­கொள்­ளப்­படும். எல்லை சார்ந்த நட­வ­டிக்­கை­களில் மாற்­றங்­கள் ஏதே­னும் செய்­யப்­பட்­டால் அது குறித்து 'சேஃப்டி­ரா­வல்' இணை­யத்­த­ளத்­தில் தக­வல் வெளி­யி­டப்­படும்," என்று அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் நுழை­யு­முன், எல்லை சார்ந்த அண்­மைய நட­வடிக்­கை­க­ளுக்கு அந்த இணை­யத்­த­ளத்­தைப் பார்க்­கும்­ப­டி­யும் சிங்­கப்­பூர் வந்த பிறகு, பிரத்­தி­யேக இடங்­களில் தங்­கு­வ­தற்­கான கட்­ட­ணம், பரி­சோ­தனை, சிகிச்சை போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­படத் தயா­ராக இருக்­கு­மா­றும் பய­ணி­க­ளுக்கு அமைச்சு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

சரி­யான பயண விவ­ரங்­க­ளைக் குறிப்­பிட வேண்­டும் எனப் பயணி­களுக்கு நினை­வூட்­டிய அமைச்சு, தவ­றான தக­வல்­களை வழங்­கு­வோர் மீது கடும் அம­லாக்க நட­வடிக்கை பாயும் என்­றும் எச்­ச­ரித்­துள்­ளது.

இதற்­கி­டையே, கொரோனா மூன்­றாம் அலையை எதிர்­கொண்டு வரும் தென்­கொ­ரி­யா­வில் ஏறத்­தாழ 16 மில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போடும் வகை­யில் ஃபைசர், ஜான்­சன் அண்ட் ஜான்­சன் ஆகிய நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து தடுப்­பூசி பெற ஒப்­பந்­தம் செய்­து­கொண்­டுள்­ளது என்று அந்­நாட்­டின் பிர­த­மர் சுங் சை கியுன் தெரி­வித்­துள்­ளார்.