தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு மில்லியன் அமெரிக்கர்கள்

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு மில்லியன் அமெரிக்கர்கள்

2 mins read

அமெ­ரிக்­கா­வில் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டி­ருக்­கிறது.

இந்­நி­லை­யில், கலி­ஃபோர்­னி­யா­வைத் தொடர்ந்து, டென்­னசி மாநி­ல­மும் கொரோனா பர­வல் மைய­மாக உரு­வெ­டுத்­துள்­ளது.

வேறு எந்த அமெ­ரிக்க மாநிலத்­தி­லும் இல்­லாத வகை­யில், டென்­ன­சி­யில் கடந்த ஏழு நாள்­களில் சரா­ச­ரி­யாக நூறா­யி­ரம் பேரில் 128 பேரை கொரோனா தொற்­றி­விட்­டது என்று அமெ­ரிக்க நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையத் தர­வு­கள் கூறு­கின்­றன. கலி­ஃபோர்­னி­யா­வில் இவ்­வி­கி­தம் நூறா­யி­ரம் பேருக்கு 111 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் எனப் பதி­வா­கி­யுள்ளன.

நன்றி தெரி­விக்­கும் நாள் கொண்­டாட்­டத்­திற்­காக அமெ­ரிக்­கர்­கள் அதி­க­ள­வில் பய­ணம் செய்­த­தும் ஒன்­று­கூ­டி­ய­துமே அண்­மைய தொற்று அதி­க­ரிப்­பிற்­குக் கார­ணம் என அதி­கா­ரி­கள் நம்­பு­கின்­ற­னர்.

அமெ­ரிக்­கா­வின் 31 மாநி­லங்­களில் இம்­மா­தத்­தில் கொரோனா தொற்­றுக்­காக மருத்­து­வ­ம­னை­யில் அதி­க­மா­னோர் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். அத்­து­டன், அத்­தொற்­றால் உயி­ரி­ழப்பு நிகழ்­வ­தும் அதி­க­ரித்து வரு­கிறது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மட்­டும் அந்­நாட்­டில் 194,000க்கும் மேற்­பட்­டோர் புதி­தா­கக் கிரு­மித்­தொற்­றுக்கு உள்­ளா­கி­னர்.

இத­னி­டையே, நேற்று முன்­தினம் காலை நில­வ­ரப்­படி, ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­பட்டு­விட்­ட­தாக நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையம் கூறி­யது.

அடுத்த ஆண்டு ஜூலைக்­குள் கூடு­த­லாக 100 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை விநி­யோ­கிக்­கும் வகை­யில் ஃபைசர் நிறு­வ­னத்­து­டன் $2 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் ஒப்­பந்­தத்தை அந்­நாட்டு அரசு செய்­து­கொண்­டுள்­ளது.

இதற்­கி­டையே, திட்­ட­மிட்­ட­படி தடுப்­பூசி போடும் பணி­கள் நடந்­தால் அடுத்த கோடைக் காலத்­தில் அமெ­ரிக்­கா­வில் இயல்புநிலை திரும்ப வாய்ப்­புள்­ள­தாக முன்­னணி நோய்த்­தொற்­றி­யல் வல்­லு­நர் ஆன்­டனி ஃபௌசி தெரி­வித்­துள்­ளார்.

தாதிமை இல்­ல­வா­சி­கள், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள், அத்­தி­யா­வ­சி­யப் பணி­யா­ளர்­கள், முதி­ய­வர்­கள், எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ள­வர்­கள் போன்­றோ­ருக்கு 2021 மார்ச், ஏப்­ரல் மாத­வாக்­கில் தடுப்­பூசி கிடைத்­து­விடும் என்று டாக்­டர் ஃபௌசி நம்­பிக்கை தெரி­வித்­தார்.

"எல்­லாம் சரி­யாக நடந்­தால், அடுத்த கோடைக் காலத்­தின் முடி­வில் 70% முதல் 85% மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போட்­டு­விட முடி­யும்," என்­றார் அவர்.