தொற்று அபாயம் அதிகமுள்ள 3வது, புதுவகை கிருமி கண்டுபிடிப்பு

தொற்று அபாயம் அதிகமுள்ள 3வது, புதுவகை கிருமி கண்டுபிடிப்பு

2 mins read
22741098-750b-418c-ab84-d4807556d3ec
பிரிட்டனின் டோவரில் வாகன ஓட்டுநரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ் -

பிரிட்­ட­னில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டு இருக்கும் புதிய, மூன்றாவது, மாறு­வ­டிவ கொவிட்-19 கிரு­மிக்­கும் தென்­னாப்­பி­ரிக்­கா­விற்­கும் தொடர்­பி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என்று பிரிட்­டிஷ் சுகா­தார அமைச்­சர் மாட் ஹேன்­காக் தெரி­வித்து இருக்­கி­றார்.

முத­லில் கண்­ட­றி­யப்­பட்ட கொரோனா கிரு­மி­யைக் காட்­டி­லும் புதிய, மாறு­வ­டிவ கிருமி அதிக தொற்று அபா­ய­மு­டை­யது எனச் சொல்­லப்­ப­டு­கிறது.

கொரோனா கிரு­மி­யில் புதிய, திடீர் மர­பணு மாற்­றம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என்­றும் அண்­மைக்­கா­ல­மாக தென்­னாப்­பி­ரிக்­கா­வில் கிரு­மித்­தொற்றுச் சம்பவங்கள் அதி­க­ரித்து வரு­வதற்கு அது கார­ண­மாக இருக்­க­லாம் என்­றும் கடந்த வாரம் அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், "பிரிட்­ட­னில் புதிய, மாறு­வ­டிவ கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள இரு சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்­ளன. பாதிக்­கப்­பட்ட இரு­வ­ரும் கடந்த சில வாரங்­களில் தென்­னாப்­பி­ரிக்கா சென்று திரும்­பி­யோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­கள்," என்று தரு ஹேன்­காக் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

ஏற்­கெ­னவே, தொற்று அபா­யம் 70% அதி­கம் கொண்ட இன்­னொரு மாறு­வ­டிவ கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க பிரிட்­டன் முயன்று வரு­கிறது.

"இந்­தப் புதிய, மாறு­வ­டிவ கொரோனா கிருமி அதிக கவலை ஏற்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. ஏனெ­னில், பிரிட்­ட­னில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள மாறு­வ­டிவ கொரோனா கிரு­மி­யைக் காட்­டி­லும் அது அதிக தொற்று அபா­யத்­தைக் கொண்­டு இ­ருப்­ப­தா­கத் தெரி­கிறது," என்­றார் திரு ஹேன்­காக்.

புதிய, மாறு­வ­டிவ கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோ­ரும் கடந்த இரு வாரங்­க­ளா­கத் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் இருந்­த­வர்­களும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் கட்­டா­ய­மா­கத் தங்­க­ளைத் தனி­மைப்­படுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­றும் அவர் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

அத்­து­டன், நாளை முதல் தெற்கு இங்­கி­லாந்­தில் மேலும் பல பகு­தி­களில் உச்­ச­நிலை சமூ­கக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

ஏற்­கெ­னவே 16 மில்­லி­யன் மக்­கள் நான்­காம் நிலைக் கட்­டுப்­பா­டு­களை எதிர்­கொண்டு வரும் நிலை­யில், இன்­னும் பல பகு­தி­களில் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­ப­ட­வுள்­ளன.

புதிய, மாறு­வ­டிவ கொரோனா கிருமி பர­வு­வ­தைக் கட்­டுப்­ப­டுத்த விதி­கள் கடு­மை­யாக்­கப்­ப­டு­வது அவ­சி­யம் என்று திரு ஹேன்­காக் குறிப்­பிட்­டார்.

பிரிட்­ட­னில் நேற்று முன்­தி­னம் புதி­தாக கிட்­டத்­தட்ட 40,000 பேரை கொரோனா தொற்­றி­யது; 744 பேர் மாண்டு­விட்­ட­னர். கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அங்கு பதிவான ஆக அதிக கொரோனா தொற்று பாதிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் இருந்து விமான சேவை நிறுத்­தம்

இத­னி­டையே, தென்­னாப்­பி­ரிக்­கா­வில் இருந்து பிரிட்­ட­னுக்கு விமா­னங்­கள் இயக்­கப்­ப­டு­வ­தைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கு­மாறு பிரிட்­டிஷ் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

"புதிய, மாறு­வ­டிவ கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தொடர்ந்து இன்று (நேற்று) காலை 9 மணி முதல் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் இருந்து விமா­னங்­கள் பிரிட்­ட­னில் வந்­தி­றங்­கு­வ­தைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்க முடி­வெ­டுத்­துள்­ளேன்," என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் கிரான்ட் ஷேப்ஸ் கூறி­இருக்­கி­றார்.