கொண்டாட்ட உணர்வைத் துளியும் குன்றவிடாத குடியிருப்பாளர்கள்

கொண்டாட்ட உணர்வைத் துளியும் குன்றவிடாத குடியிருப்பாளர்கள்

1 mins read
2b5b9f70-d81e-4d9c-8c75-9da8a3e64d11
பிடோக் ரெசர்வோர் சாலை, புளோக் 702 மற்றும் 703க்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் அலங்காரப் பின்னணியில் தம் ஒன்பது வயது மகள் ஜோஷிதாவையும் 11 மாதக் குழந்தை தபவனையும் படமெடுக்கிறார் திருவாட்டி ராமலிங்கம் ஷாலினி, 35. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வடக்­கில் செம்­ப­வாங்­கில் இருந்து மேற்­கில் கிள­மெண்டி, கிழக்­கில் பிடோக், தெம்­ப­னிஸ், பாசிர் ரிஸ் என தீவெங்­கும் உள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கப் பேட்­டை­களில் மக்­கள் சொந்­த­மாக வண்ண விளக்­கு­கள், சரி­கைத் தோர­ணங்­கள் எனப் பல­வித அலங்­கா­ரங்­களைச் செய்து, இன்­றைய கிறிஸ்­மஸ் பண்­டி­கையை வித்­தி­யா­ச­மா­கக் கொண்­டா­டத் தயா­ராக இருக்­கின்­ற­னர்.

கொவிட்-19 நோய்ப் பர­வல் கார­ண­மாக பிரம்­மாண்­ட­மாக கொண்­டாட முடி­யாத சூழ­லில், குடி­யி­ருப்­பா­ளர்­கள் பல­ரும் கைகோத்து, கிறிஸ்­மஸ் அலங்­கா­ரங்­க­ளைச் செய்துள்­ள­னர்.

பிடோக் ரெசர்­வோர் சாலை, புளோக் 702க்கு முன்­பாக 3.5 மீட்­டர் உயர கிறிஸ்­மஸ் மரம், தெம்­ப­னி­சில் அட்­டைப் பெட்­டி­க­ளை­யும் 'ஸ்டை­ரோ­ஃபோம்' கலன்­க­ளை­யும் கொண்டு அமைக்­கப்­பட்­டுள்ள மிகச் சிறிய தேவா­ல­யம் என குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஆர்­வத்­து­டன் அலங்­கார வேலை­களில் பங்­கு­கொண்டு, கொண்­டாட்ட உணர்வு குன்­றா­மல் பார்த்­துக்­கொண்­ட­னர்.

தெம்­ப­னிஸ் ஸ்தி­ரீட் 72, புளோக் 722ல் இம்­முறை ஒற்றை ஆளாக கிறிஸ்­மஸ் அலங்­கா­ரங்­க­ளைச் செய்­துள்­ளார் திரு லிம் பெங் ஹுவாட். முந்­தைய ஆண்­டு­களில் அவர் சிறிய அள­வில் ஒளி­யூட்டு விழா­விற்­கும் ஏற்­பாடு செய்து, அண்­டை­வீட்­டா­ரைக் கொண்­டாட்ட உணர்­வில் திளைக்க வைத்­தார்.

செம்­ப­வாங் வட்­டா­ரத்­தில், வியட்னாமைச் சேர்ந்தவரும் இல்­லத்­தரசியுமான லூ தி மை உயன், 43, தலை­மை­யில் பத்­துப் பேர் கொண்ட குழு, உலோ­கச் சட்­ட­ங்­க­ளை­யும் பசு­மை­நிற வலை­க­ளை­யும் கொண்டு கேன்­பரா ஸ்தி­ரீட் புளோக் 121ல் மூன்று மீட்­டர் உய­ரத்­திற்கு கிறிஸ்­மஸ் மரத்தை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.