ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி தொடக்கம்

ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி தொடக்கம்

2 mins read
15a00d75-c577-4706-a22b-a9980f19557a
-

ஐரோப்­பிய ஒன்­றி­யம் இது­வரை இல்­லாத வகை­யில் எல்லை தாண்­டிய தடுப்­பூ­சித் திட்­டத்தை நேற்று தொடங்­கி­யது. கொவிட்-19 தொற்றுக்கு முடி­வு­கட்­டும் ஒரு முயற்­சி­யாக ஒன்­றிய நாடு­கள் இந்­ந­ட­வ­டிக்­கையை தொடங்கியுள்­ளன. ஏறத்தாழ 450 மில்­லி­யன் மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்­பா, பல்­வேறு மருந்து தயா­ரிப்பு நிறு­வனங்களி­ட­மி­ருந்து இரண்டு பில்­லி­ய­னுக்­கும் அதிகமான தடுப்­பூசி மருந்தை வாங்க ஒப்­பந்­தம் போட்­டுள்­ளது. அடுத்த ஆண்­டில் எல்லா பெரி­ய­வர்களுக்­கும் தடுப்­பூசி போட்டு முடிக்க ஒன்­றி­யம் இலக்கு கொண்டுள்ளது.

தடுப்­பூசி போடு­வ­தைப் பர­வ­லாக்­கும் நோக்­கில் ஓய்­வு­பெற்ற மருத்­து­வர்­கள் வந்து உதவ ஒன்­றி­யத்­தின் சில நாடு­கள் அழைப்பு விடுத்­துள்­ளன. அதே சம­யம் ஊசி போடு­வோர் தொடர்­பி­லான கட்­டுப்­பா­டு­களை சில நாடு­கள் தளர்த்தி உள்­ளன. ஆயினும், தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தில் மக்­க­ளி­டையே பெரும் தயக்­கம் இருப்­ப­தாக ஆய்வு ஒன்­றின் மூலம் தெரிய வந்துள்­ளது. அத­னால் பிரான்ஸ் தொடங்கி போலந்து வரை ஒன்­றி­யத்­தில் இடம்­பெற்றுள்ள 27 நாடு­க­ளின் தலை­வர்­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மக்­களை ஊக்­கப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

"சிர­மத்­தைக் கொடுத்து வந்த ஆண்டை நாம் கடக்கவுள்ளோம். கொள்­ளை­நோ­யில் இருந்து விடு­பட தடுப்­பூ­சிப் போட்­டுக்­கொள்­வதே சிறந்­தது. புதிய ஆண்­டில் வழக்­க­மான வாழ்க்­கைக்­குத் திரும்ப இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­துங்­கள்," என்று பிர­சல்­ஸைத் தள­மா­கக் கொண்ட ஐரோப்­பிய ஆணை­யத்­தின் தலை­வர் குமாரி உர்­சுலா வோன் டெல் லெயென் தமது டுவிட்­ட­ரில் குறிப்­பிட்டு உள்­ளார்.

ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளின் ஒத்­து­ழைப்­பின்­மை­யால் 2020 தொடக்­கத்­தில் கொரோனா பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த அவை தவ­றி­விட்­ட­தா­கக் குறை­கூ­றல் எழுந்­தது. அது­போன்ற புகா­ரைத் தவிர்க்­கும் நோக்­கில் தடுப்­பூசி போடு­வ­தில் ஒன்­றிய நாடு­கள் ஓர் அ­ணி­யா­கத் திரண்டு ஒன்­றோடு ஒன்று ஒத்­து­ழைத்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.