முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினருக்கு தள்ளுபடிகளை நீட்டிக்கும் பேர்பிரைஸ்

முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினருக்கு தள்ளுபடிகளை நீட்டிக்கும் பேர்பிரைஸ்

1 mins read
e311758b-4ec1-4747-87a9-2d9bfed033e9
-

பேர்பிரைஸ் பேரங்காடிகளில் முன்னோடி மற்றும் மெர்டேக்கா தலைமுறையினர் தொடர்ந்து அடுத்த ஆண்டிலும் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான தள்ளுபடிகளைப் பெற்று மகிழலாம். ஜனவர் 1ஆம் தேதி முதல், பயனியர் தலைமுறையினருக்கான மூன்று விழுக்காடு தள்ளுபடி மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்படும் என பேர்பிரைஸ் பேரங்காடி நிறுவனம் இன்று (டிசம்பர் 28ஆம் தேதி) அறிவித்தது. வாரத்திற்கு இரண்டுமுறை (திங்கள் மற்றும் புதன்கிழமை) அவர்கள் இந்தத் தள்ளுபடிகளைப் பெற்று மகிழலாம்.

மெர்டேக்கா தலைமுறையினருக்கும் ஒவ்வொரு புதன்கிழமை அன்று வழங்கப்படும் தள்ளுபடி அடுத்த ஆண்டு நீடிக்கும்.இந்தச் சலுகையை பேரங்காடி, 10 மில்லியன் வெள்ளி செலவில் வழங்கவுள்ளது. இந்தச் சலுகைத் திட்டங்களுக்காக ஏற்கெனவே 43 மில்லியன் வெள்ளி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கு முதிய வாடிக்கையாளர்கள் தரும் ஆதரவால் பேரங்காடி ஊக்குவிக்கப்படுவதாக என்டியுசி பேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியென் பெங் தெரிவித்திருக்கிறார்.

"கடந்தாண்டில் மட்டும் பேர்பிரைசின் விலைக்கழிவுத் திட்டங்கள், பேரங்காடி உறுப்பினர்களுக்கும் முதியவர்களுக்கும் மொத்தமாக 7.7 மில்லியன் வெள்ளியைச் சேமிக்கக் கைகொடுத்துள்ளன. இந்த முயற்சிகள் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டிலும் தங்கள் பணத்தைச் சேமிக்க தொடர்ந்து உதவும் என நாங்கள் விரும்புகிறோம்," என்று திரு சியா கூறினார்.