ஊழியர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களின் மீதான பயண எண்ணிக்கைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் மூன்றாவது கட்ட தளர்வு நடவடிக்கையின் தொடக்க நாளான இன்று இந்த புதிய தளர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சும் நிலப்போக்குவரத்து ஆணையமும் தெரிவித்துள்ளன.இதற்கு முன்னதாக இந்த குறைக்கப்பட்ட பயண எண்ணிக்கை இவ்வாண்டு ஜூன் மாதம் நோய்ப்பரவல் முறியடிப்புத் திட்டத்தின்போது அறிவிக்கப்பட்டது.
இதர பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் தொடரும். வாகனத்திற்குள் ஊழியர்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணியவேண்டும் என்றும் அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசக்கூடாது என்றும் மனிதவள அமைச்சு தெரிவித்தது.அத்துடன் ஊழியர்களை வேலைக்கு அழைத்துச் செல்வதற்கான தனியார் போக்குவரத்து ஏற்பாடுகளை முதலாளிகளே தொடர்ந்து செய்யவேண்டும். அவர்கள் பயணம் செய்யும் வாகனங்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. அத்துடன், பொதுப்போக்குவரத்தை ஊழியர்கள் பயன்படுத்தக்கூடாது.
ஏப்ரல் 28ஆம் தேதியன்று முன்னதாக இருந்த விதிமுறையை மீறியதற்காக 28 முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

