மூன்றாம் கட்டத் தளர்வுகளின் முதல் நாள்: அவசரப்படாத மக்கள்

2 mins read
b5f93165-7600-42ea-be40-de1d72dd1436
யுனைடெட் ஸ்குவேர் கடைத்தொகுதியில் இருக்கும் ஃபூட் ஜங்ஷன் உணவங்காடி நிலையத்தில் நேற்று நண்பகல் நிலவரம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எட்­டுப் பேர் வரை­யி­லும் குழு­வா­கச் சேர்ந்து உண்­ண­லாம் என்­ற­போ­தும் மூன்­றாம் கட்­டத் தளர்­வு­கள் நடை­மு­றைக்கு வந்த முதல் நாளான நேற்று அப்­படி ஒரு சில குழுக்­களே தென்­பட்­டன.

பீஷா­னில் உள்ள ஜங்­ஷன் 8, போன விஸ்­தா­வில் உள்ள ஸ்டார் விஸ்தா, ஆர்ச்சர்ட் சாலையில் உள்ளவை என பல கடைத்­தொகுதி­க­ளி­லும் மக்­கள் பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றி­ய­தை­யும் 'சேஃப்என்ட்ரி' முறை­யில் தங்­க­ளின் வரு­கை­யைப் பதிவு­செய்­த­தை­யும் காண முடிந்­தது.

அதே­போல, கிம் மோ, தோ பாயோ ஆகிய பகு­தி­களில் உள்ள உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் சிறிய அள­வி­லான குழுக்­க­ளா­கவே சேர்ந்து உண்­ட­னர்.

மூன்­றாம் கட்­டத் தளர்­வு­க­ளின்­கீழ், அதி­க­பட்­சம் ஐவர் என்­றி­ருந்த ஒன்­று­கூ­டு­வோர் வரம்பு எட்­டுப் பேராக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

பெரும்­பா­லான குழுக்­களில் ஐவ­ருக்கு மிக­வில்லை என்­ற­போ­தும், ஆறு, ஏழு அல்­லது எட்­டுப் பேர் கொண்ட குழு­வாக வந்­த­வர்­கள் மகிழ்ச்சி தெரி­வித்­த­னர்.

யுனோயா தொடக்­கக் கல்­லூரி மாண­வ­ரான ஜோயல் கோ, 17, தம் நண்­பர்­கள் ஐவ­ரு­டன் சேர்ந்து ஜங்­ஷன் 8ல் உள்ள ஓர் உண­வகத்­திற்கு நேற்று வந்­தி­ருந்­தார்.

"நண்­பர் கூட்­டத்­தில் ஐவ­ருக்கு மேல் இருந்­தால் இரு பிரி­வு­க­ளா­கப் பிரிந்து உண்ண வேண்டி இருந்­தது. இப்­போது, எல்­லா­ரும் சேர்ந்து உண்ண முடி­வது மகிழ்ச்சி தரு­கிறது," என்­றார் ஜோயல்.

இத­னி­டையே, ஓர் உணவு மேசையில் எட்டு அல்­லது அதற்­கும் குறை­வான இருக்­கை­கள் இருந்­தால் அவ்­வி­ருக்­கை­களில் 'அம­ரக்­கூ­டாது' என்­ப­தைக் குறிக்­கும் குறி­யீ­டு­கள் இருக்­காது என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் ஓர் அறிக்கை வாயி­லா­கத் தெரி­வித்­து உள்­ளது.

அதே நேரத்­தில், உண­வங்­காடி நிலை­யங்­களில் இரு வேறு குழுக்­களுக்கு இடையே குறைந்­தது ஒரு மீட்­டர் இடை­வெளி இருக்க வேண்­டும் என்­றும் ஒரு மீட்­ட­ருக்­குக் குறை­வான இடை­வெ­ளி­யு­டன் இரு மேசை­கள் இருந்­தால் சில இருக்­கை­கள் 'அம­ரக்­கூ­டாது' என்­ப­தற்­கான குறி­யீட்­டு­டன் இருக்­கும் என்­றும் வாரி­யம் கூறி­யுள்­ளது.

அத்­து­டன், பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளுக்கு இணங்கி நடப்­பதை உறு­திப்­ப­டுத்த உண­வங்­காடி நிலை­யங்­களில் பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­கள் தொடர்ந்து பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வர் என்­றும் வாரி­யம் தெரி­வித்து இருக்­கிறது.