சமூகத் தொற்று குறைவு என்றாலும் தடுப்பூசி போடவும்: சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்

சமூகத் தொற்று குறைவு என்றாலும் தடுப்பூசி போடவும்: சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்

2 mins read
8d1694a5-fbde-41c1-b9ba-27bfac5cc0f9
படம்: சாவ் பாவ் -

சமூ­கத்­தில் பதி­வா­கும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் குறை­வாக இருந்­தா­லும் சிங்­கப்­பூ­ரர்­கள் கிரு­மிக்கு எதி­ரா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் கூறி­யுள்­ளார்.

அடுத்த கிரு­மிப் பர­வல் என்பது வெகு தூரத்தில் இல்லை என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தால் ஒட்­டு­மொத்த சமூ­கத்­தின் பாது­காப்பு மேம்­படும். அத்­து­டன் முடிந்­த­வரை துரி­த­மாக அதன் சமூக, பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­களை சிங்­கப்­பூர் படிப்­ப­டி­யாக இயல்­பு­நி­லைக்­குக் கொண்­டு­வர முடி­யும் என்று அவர் நேற்று கூறி­னார்.

மேலும், நாட்­டின் சுகா­தா­ரப் பரா­மரிப்­புக் கட்­ட­மைப்புக்கு நெருக்குதல் ஏற்படாமல் தடுப்­பூசி பாது­காக்­கும். சிங்­கப்­பூ­ரின் பய­ணப் பாதை­கள் மறு­ப­டி­யும் திறப்­ப­தற்­கான வழி­யை­யும் தடுப்­பூ­சித் திட்­டம் உரு­வாக்­கி­டும். எனவே, வாய்ப்பு வந்­த­தும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­மாறு மக்­க­ளுக்கு அமைச்­சர் கான் அறி­வு­றுத்­தி­னார்.

'ஃபைசர்-பயோ­என்­டெக்' தடுப்­பூ­சி­களு­டன் நேற்று தேசிய தொற்­று­நோய் தடுப்பு நிலை­யத்­தில் சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டம் தொடங்­கி­யது. நிலை­யத்­தைச் சேர்ந்த சுகா­தாரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்குத் தடுப்­பூசி போடப்­பட்­டது. அங்கு வரு­கை­ய­ளித்த அமைச்­சர் கான், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் இவ்­வாறு கூறி­யி­ருந்­தார்.

"எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளால் அனைத்­து­ல­கப் பய­ணங்­கள் நின்­று­போய் விட்­டன. தடுப்­பூ­சித் திட்­டம்­வழி இத்­த­கைய நின்­று­போன பய­ணப் பாதை­கள் பல மீண்­டும் தொடரும் வாய்ப்பு ஏற்படும்," என்­றார் அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் தலை­வ­ராக உள்ள திரு கான்.

தடுப்­பூ­சி­யின் ஆற்­றல் குறித்­துக் கேட்­கப்­பட்­ட­போது, அது உலக சுகா­தார நிறு­வ­னம், சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம், இதர கட்­டுப்­பாட்டு அதி­கார அமைப்­பு­க­ளின் நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு இருப்­ப­தாக திரு கான் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும் தடுப்­பூசி உரு­வாக்­கப்­பட்டு சில மாதங்­களே ஆகி­யுள்ள நிலை­யில், அதன் நீண்­ட­கால பாதிப்­பு­கள் அறி­ய முடியவில்லை என்­பதை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

பிர­த­மர் லீ சியன் லூங் உட்­பட தாமும் அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­களும் தடுப்­பூசி­யைப் போட்­டுக்­கொள்ள இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு முன்­னு­ரிமை தரப்­படும் என்று தெரி­வித்த திரு கான், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­கான அட்­ட­வணை திட்­ட­மி­டப்­பட்டு வரு­வ­தா­கச் சொன்­னார்.

"எனது முறை வரும்­போது, தடுப்­பூசி­யைப் போட்­டுக்­கொள்ள முன்­வ­ரு­வோ­ரில் நானும் ஒரு­வ­ராக இருப்­பேன்," என்­றார். வரும் வாரங்­களில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­படும் என்று அர­சாங்­கம் அறி­வித்­தி­ருந்­தது.

தடுப்­பூ­சியை 70 வயது, மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­தில் உள்ள சிங்­கப்­பூர்­வாசி­கள் அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் முதல் போட்­டுக்­கொள்­ள­லாம். அதை­யடுத்து மருத்­துவ ரீதி­யா­கத் தகு­தி­பெறும் மற்ற சிங்­கப்­பூ­ரர்­களும் நீண்­ட­கால சிங்­கப்­பூர்­வா­சி­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம்.