கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் ரத்து

கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் ரத்து

3 mins read
d1e48e96-6d2e-4ffb-9f34-92fbafabdd46
-

கோலா­லம்­பூர்- சிங்­கப்­பூர் அதி­வேக ரயில் திட்­டம் ரத்­தா­கி­ விட்­டது. மலே­சியா தெரி­ வித்து இருந்த மாற்­றங்­கள் தொடர்­பில் 2020 டிசம்­பர் 31க்குள் உடன்­ பாடு ஏற்­ப­ட­ வில்லை. இதன்­ கா­ர­ண­மாக அந்­தத் திட்­டம் முடித்­துக்­ கொள்­ளப்­பட்டு இருக்­கிறது.

பிர­த­மர் லீ சியன் லூங்­கும் மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசி­னும் கூட்டு அறிக்கை ஒன்­றில் நேற்­று இதனை அறி­வித்­த­னர். கொவிட்-19 கார­ண­மாக மலே­சி­யப் பொரு­ளி­ய­லுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­க­ளைக் கருத்­தில்­கொண்டு, இந்த அதி­வேக ரயில் திட்­டத்­தில் பல மாற்­றங்­க­ளைச் செய்ய வேண்டி இருக்­கிறது என்று மலே­சிய அர­சாங்­கம் குறிப்­பிட்டு இருந்­தது என்­பதை அந்­தக் கூட்­ட­றிக்­கைச் சுட்­டி­யது.

அந்த மாற்­றங்­கள் தொடர்­பில் பல சுற்று பேச்­சு­வார்த்­தை­களை இரண்டு அர­சாங்­கங்­களும் நடத்தி வந்­தன. ஆனால் உடன்­பாட்டை எட்ட முடி­ய­வில்லை.ஆகை­யால் கோலா­லம்­பூர்-சிங்­கப்­பூர் அதி­வேக ரயில் திட்ட உடன்­பாடு 2020 டிசம்­பர் 31ஆம் தேதி­யு­டன் காலா­வ­தி­யா­கி­விட்­டது என்று அந்த அறிக்கை குறிப்­பிட்­டது.

இத­னை­ய­டுத்து இரு நாடு­களும் தங்­க­ளுக்­கு­ரிய கடப்­பா­டு­களை நிறை­வேற்றி தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கும் என்­றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இத­னி­டையே, சிங்­கப்­பூர் போக்­கு­வ­ரத்து அமைச்சு தனி­யாக அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

கோலா­லம்­பூர்-சிங்­கப்­பூர் அதி­வேக ரயில் திட்ட இரு தரப்பு இணக்­கம் முடி­வுக்கு வர மலே­சியா அனு­ம­தித்­து­விட்­டது என்­றும் இந்­தத் திட்ட இணக்­கத்­திற்­கேற்ப சிங்­கப்­பூர் ஏற்­கெ­னவே செல­விட்டு உள்ள தொகையை மலே­சியா ஈடு­செய்ய வேண்டி இருக்­கும் என்­றும் போக்­கு­வ­ரத்து அமைச்சு தெரி­வித்­தது. அதி­வேக ரயில் திட்­டம் ரத்­தாகி இருந்­தா­லும் இரு நாடு­களும் தொடர்ந்து நல்­லு­றவை நிலை­நாட்டி வர­வும் இரு நாடு­க­ளுக்­கும் இடைப்­பட்ட தொடர்­பு­க­ளைப் பலப்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட பல துறை­க­ளி­ல் அணுக்­க­மாக ஒத்­து­ழைக்­க­வும் உறு­தி­பூண்டு இருப்­ப­தாகக் கூட்­ட­றிக்கை தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ருக்கு மலே­சியா கொடுக்க வேண்டி இருக்­கின்ற இழப்­பீட்­டுத் தொகை பற்­றிய விவ­ரங்­கள் நேற்­றைய கூட்­ட­றிக்­கை­யில் இடம்­பெ­ற­வில்லை. இருந்­தா­லும் 2018 ஜூலை­யில் சிங்­கப்­பூ­ரின் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ராக இருந்த கோ பூன் வான், நாடா­ளு­மன்­றத்­தில் இது பற்றி தெரி­வித்து இருந்தார்.

இந்த ரயில் திட்­டத்­தின் தொடர்­பில் சிங்­கப்­பூர் 2018 மே மாத முடிவு வாக்­கில் $250 மில்­லி­ய­னுக்­கும் அதி­கத் தொகை­யைச் செல­விட்­டு­ள்ளது என்று தெரி­வித்து இருந்­தார்.சிங்­கப்­பூ­ர் செலவிடும் தொகை இன்னும் கூடும் என்­றும் அவர் குறிப்­பிட்டு இருந்­தார்.

கோலா­லம்­பூர்-சிங்­கப்­பூர் இடை­யில் அந்த 350 கி.மீ. அதி­வேக ரயில் திட்­டத்தை அமைக்க இரு தரப்­பு­களும் 2013ல் இணங்­கின. அந்த ரயில், கோலா­லம்­பூர் நகர் பகு­தி­யில் உள்ள பண்­டார் மலே­சி­யா­வில் அமை­யும் ஒரு முனை­யத்­தில் இருந்து சிங்­கப்­பூ­ரில் ஜூரோங் ஈஸ்ட்­டில் கட்­டப்­படும் ஒரு முனை­யம் வரை சேவை­யாற்­ற­வி­ருந்­தது.

அதிவேக ரயில் வழித்­த­டத்­தில் ஏழு ரயில் நிலை­யங்­கள் அமைந்­தி­ருக்­கும். கோலா­லம்­பூர்-சிங்­கப்­பூர் பயண நேரம் 90 நிமி­ட­மா­கக் குறைந்­து­வி­டும் என்­றெல்­லாம் தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது. அந்­தத் திட்­டம் தொடர்­பான சட்­ட­பூர்வ அம்­சங்­கள் உள்­ள­டங்­கிய உடன்­பாடு 2016 டிசம்­ப­ரில் பிர­த­மர் லீ சியன் லூங், அப்­போது மலே­சி­யப் பிர­த­ம­ராக இருந்த நஜிப் ரசாக் இரு­வர் முன்­னி­லை­யில் கையெ­ழுத்­தா­னது.

சிங்­கப்­பூர் திட்­டப் பணி­க­ளைத் தொடங்­கி­யது. ஆனால் மலே­சி­யா­வில் 2018 மே மாதம் நடந்த பொதுத் தேர்­த­லில் அர­சாங்­கம் மாறி­யதை அடுத்து புதிய அர­சின் வேண்­டு­கோளின் பேரில் அதிவேக ரயில் திட்­டம் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டது.

தொடக்­க­மாக, இந்­தத் திட்­டம் இரண்­டாண்டு காலத்­திற்கு நீட்­டிக்­கப்­படும் என 2018 செப்­டம்­பரில் முடிவானது. அது 2020 மே மாதம் முடி­வ­டைந்­தது. பிறகு டிசம்­பர் 31 வரை கடை­சி­யாக காலக்­கெடு விதிக்­கப்­பட்டு இருந்­தது. அதையடுத்து இப்போது திட்டம் ரத்தாகிவிட்டது.