தமிழ்நாட்டில் இன்று தடுப்பூசி ஒத்திகை

தமிழ்நாட்டில் இன்று தடுப்பூசி ஒத்திகை

2 mins read
8f19f9f4-61ab-4ff3-8a6f-e763501e4813
தமிழகத்தில் 51 நடமாடும் குளிர் சாதனப் பெட்டகங்கள் தயாராக உள்ளன. மருந்தைப் பாது காக்க 2,800 இரண்டாம் நிலை குளிர் சாதன வசதிகள் இருப்பதாக அண்மையில் தெரி விக்கப்பட்டது. படம்: தமிழக ஊடகம் -

இந்­தி ­யா­வில் விரை­வில் கொவிட்-19 தடுப்­பூசி அங்­கீ­ க­ரிக்­கப் ­படும் என்ற எதிர்­ பார்ப்­பில் நாடு முழு­வ­தும் இன்று கொவிட்-19 தடுப்­பூசி ஒத்­திகை தொடங்­கு­கிறது.எல்லா மாநில தலை­ ந­கர்­க­ளி­லும் குறைந்­த­ பட்­சம் மூன்று இடங்­களில் ஒத்­திகை நடத்­தப்­படும். சில மாநி­லங்­களில் மாவட்­டங்­க­ளி­லும் ஒத்­திகை நடத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.கொவிட்-19 தடுப்­பூசி அங்­கீ­காரம் கிடைத்த உட­னேயே அதை கூடு­மானவரை பொது­மக்­களில் பல­ருக்­கும் எட்ட செய்­வதைச் சாத்­தி­ய­மாக்­கு­வது ஒத்­தி­கை­யின் நோக்­கம் என்று தெரி­விக்­கப்­பட்டது.

இதற்­காக தமி­ழ­கம் உள்­ளிட்ட எல்லா மாநி­லங்­களும் பர­ப­ரப்­பாக ஆயத்­த­மா­கின்­றன. முதலில் 6 லட்­சம் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­படும் என தமிழக சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் தெரி­வித்­தார். தடுப்­பூசி போடு­வ­தற்­காக தமி­ழ­கத்­தில் 8,881 மையங்­கள் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார். தடுப்­பூ­சியை எப்­படி போடு­வது என்­ப­தில் முதல் கட்­ட­மாக 21,170 தாதி­யருக்கு நிர்­வா­கம் பயிற்சி அளித்­துள்­ளது. 27 அர­சாங்க மருத்து­வக் கல்­லூரி மருத்­துவமனை­கள், 303 தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள், 2,286 தொடக்க சுகா­தார நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றில் குளிர்சாதன வசதி­களை உரு­வாக்கி அவற்­றில் மருந் தைப் பத்­தி­ரப்­ப­டுத்­த­ அர­சாங்­கம் ஏற்­பா­டு­க­ளைச் செய்து­வ­ரு­கிறது.

இந்­தியா முழு­வ­தும் தடுப்­பூசி போடு­வ­தற்­காக ஏறக்­கு­றைய 100,000 பேருக்குப் பயிற்சி அளிக்­கப்­பட்டு இருக்­கிறது. மாநில அர­சாங்­கங்­கள், மாவட்ட அதி­கா­ரி­கள், மாந­கர ஆணை­யர்கள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போட ஆயத்­த­மா­கும்­படி கட்­ட­ளை­யி­டப்­பட்டு இருக்­கிறது. தள­வா­டப் போக்­கு­வ­ரத்து, தக­வல் தொழில்­நுட்ப முறை­கள் எல்­லா­வற்­றை­யும் ஆயத்­தப்­ப­டுத்­தும்­படி அவர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு இருக்­கி­றார்­கள். வரும் ஜூலை வாக்­கில் 30 கோடி பேருக்குத் தடுப்­பூ­சி­யைப் போட்டு இருக்க வேண்­டும் என்­பது இலக்கு.மகா­ராஷ்­டிரா, கேரளா முத­லான மாநி­லங்­களில் தலை­ந­கர் மட்­டு­மின்றி முக்­கி­ய­மான இதர நகர்­களி­லும் ஒத்­திகை நடை­பெ­று­கிறது.

இவ்­வே­ளை­யில், இந்­தி­யா­வின் மத்­திய மருந்து தர கட்­டுப்­பாட்டு நிறு­வ­னத்­தின் அதி­கா­ரி­கள் நேற்று மீண்­டும் கூடி கொவிட்-19 தடுப்­பூசி அங்­கீ­கா­ரம் பற்றி முடிவு செய்­ய­இருந்­தார்­கள்.சீரம் மருந்­தாய்­வுக் கழ­கம், பாரத் பயோ­டெக் நிறு­வ­னம், ஃபைசர் நிறு­வ­னம் ஆகி­யவை தங்­கள் மருந்து­களை அங்­கீ­க­ரிக்­கு­மாறு கேட்டு அவற்றை இந்த அமைப்­பி­டம் தாக்­கல் செய்து இருக்­கின்­றன.