சிங்கப்பூரில் புதிதாக 33 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 58,662 ஆக உயர்ந்தது. செப்டம்பர் 14ஆம் தேதி முதல் இதுவே ஆக உயர்வான அன்றாட எண்ணிக்கையாக இது உள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் கிருமியைத் தொற்றியவர்கள். இவர்கள் சிங்கப்பூருக்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் உத்தரவு கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இவர்களில் அறுவர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள். ஒன்பது பேர் வெளிநாட்டு ஊழியர்கள். இதற்கு முன்னதாக மார்ச் 28ஆம் தேதியன்று வெளிநாடுகளில் கிருமித் தொற்றிய புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, ஆக உயர்வான எண்ணிக்கையான 42 ஆக இருந்தது.

