தைப்பூசம் 2021 - இணைய முன்பதிவு

தைப்பூசம் 2021 - இணைய முன்பதிவு

1 mins read
3c9c823a-d245-4228-9635-222a5fccdde4
-

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத் திருவிழாவுக்காக முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் நாளை முதல் (ஜனவரி 3ஆம் தேதி) இணையம் வழியாக அவ்வாறு செய்யலாம்.

ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் தைப்பூச திருவிழாவுக்காக அந்தக் கோயில் நள்ளிரவு முதல் இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும். ஜனவரி 24ஆம் தேதியன்று இரவு 8 மணிக்கு அந்த முன்பதிவு முறை மூடப்படும் என்று அந்தக் கோயில் தெரிவித்தது.

இந்த இணையத்தளத்தில் பக்தர்கள் இணையப் முன்பதிவுகளைச் செய்யலாம்.

"சிங்கப்பூரின் தைப்பூசத் திருவிழாவின் செழுமையையும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனையும் கருத்தில் கொண்டு பக்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் சுமுகமான தைப்பூசத்திற்காக ஏற்பாட்டுக் குழுவினர் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது," என்று

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், இந்து அறக்கட்டளை வாரியம் ஆகியவற்றின் ஆலோசனையுடன் தனது அறிக்கையில் கூறியுள்ளது.