கிருமித்தொற்று எண்ணிக்கையில் அமெரிக்காவும் பிரிட்டனும் ஒரே நாளில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
சனிக்கிழமை அங்கு ஆக அதிகமாக 277,000 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாயின. எந்த ஒரு நாட்டிலும் ஒரே நாளில் பதிவாகாத உச்ச எண்ணிக்ைக இது. புதிய நோயாளிகளையும் சேர்த்து அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20.4 மில்லியனைக் கடந்துவிட்டது.
இதில் மூன்றில் ஒரு பங்கு டிசம்பர் மாதத்தில் மட்டும் பதிவானவை. குளிர் காலம் என்பதால் பலரும் வீட்டுக்குள் முடங்கியதாலும் விடுமுறை காலத்தில் சமூக ஒன்று
கூடல்கள் அதிகரித்ததாலும் அந்த மாதத்தில் அதிக அளவிலான தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. நியூயார்க் நகரில் மட்டும் இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் நடவடிக்கை ஒருபக்கம் நடைபெற்றாலும் கிருமிப் பரவலின் வேகம் அடங்கியதாகத் தெரியவில்லை.
சனிக்கிழமை நிலவரப்படி 4.2 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
பிரிட்டனில் சனிக்கிழமை 57,725 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இது அந்நாட்டில் ஒரே நாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை.
மேலும், பிரிட்டனில் பாதிக்கப்
படுவோர் எண்ணிக்கை ஐந்து நாட்களாக ஏறிய வண்ணம் உள்ளது. அதுவும் தொடர்ச்சியாக 50,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதே வேகத்தில் சென்றால், இத்தாலியைப் பின்னுக்குத் தள்ளி கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடு என்னும் நிலையை பிரிட்டன் அடைந்துவிடக்கூடும்.
பிரிட்டனில் கடந்த சில வாரங்களுக்கு முன் இப்போது அதிக
மாகப் பதிவாகி வரும் எண்ணிக்கையில் பாதி அளவுதான் இருந்தது. டிசம்பரின் இறுதி வாரங்களில் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.
கிருமிப் பரவல் வேகம் அதிகரித்திருப்பதால் நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களை மேலும் இரு வாரங்களுக்கு மூடுமாறு ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்தை நெருக்கி வருகின்றன. முன்னதாக, லண்டனில் உள்ள பள்ளிகளை மட்டும் மூட உத்தரவிடப்பட்டு இருந்தது.

