தடுப்பூசி வந்துவிட்டதால் கொரோனா பிடியில் இருந்து இந்தியா விடுபடும்: அமைச்சர் நம்பிக்கை

தடுப்பூசி வந்துவிட்டதால் கொரோனா பிடியில் இருந்து இந்தியா விடுபடும்: அமைச்சர் நம்பிக்கை

3 mins read

கொரோ­னா­வுக்கு எதி­ரான இரு வகை தடுப்­பூ­சி­க­ளுக்கு இந்­திய அர­சாங்­கம் ஒப்­பு­தல் அளித்­தி­ருப்­

ப­தைத் தொடர்ந்து பொது­மக்­க­ளுக்கு தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை அங்கு இன்­னும் ஒரு­சில நாட்­களில் தொடங்க உள்­ளது.

தடுப்­பூசி மருந்து செலுத்­தப்­படு­ வது இந்­தி­யாவை சிர­மத்­தில் இருந்து மீட்­கும் என்­றும் விரை­வி­லேயே கொவிட்-19 கிரு­மித்­தொற்று அற்ற நாடு என இந்­தியா மாறும் என்­றும் அந்­நாட்டு சுகா­தார, குடும்­ப­நல துணை அமைச்­சர் அஷ்­வினி குமார் செளபே தெரி­வித்து உள்­ளார்.

இது குறித்து நேற்று தமது டுவிட்­ட­ரில் விளக்­கம் அளித்த அவர், "கோவாக்­சின், கொவி­ஷீல்ட் என்­னும் இரு­வ­கை­யான தடுப்­பூசி மருந்­து­க­ளின் அவ­ச­ர­கா­லப் பயன்­பாட்­டுக்கு இந்­திய மருந்து தரக் கட்­டுப்­பாட்டு ஆணை­யம் அனு­மதி அளித்­து­விட்­டது.

"பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் தலை­மை­யின்­கீழ் கொரோனா கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரா­கத் தொடுக்­கப்பட்ட போரில் இது ஒரு முக்­கிய சாதனை," என்­றார் அவர்.

தடுப்­பூசி மருந்து தயா­ரிப்­பில் ஈடு­பட்டு வரும் விஞ்­ஞா­னி­க­ளை­யும் சுகா­தா­ரத் துறை பணி­யா­ளர்­

க­ளை­யும் பாராட்­டிய அமைச்­சர், இந்­தியா வெகு­வி­ரை­வில் கொரோனா பிடி­யி­லி­ருந்து முழு­மை­யாக வில­கும் என்­றார்.

சீரம், பாரத் பயோ­டெக் தயா­ரிப்­பு­க­ளின் தடுப்­பூ­சி­க­ளின் அவ­ச­ர­கா­லப் பயன்­பாட்­டுக்கு அனு­மதி அளித்­துள்ள இந்­தியா, கெடிலா சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிறு­வ­னம் பரி­சோ­தித்து வரும் தடுப்­பூ­சிக்­கும் அனு­மதி அளிக்­கும் என்று தெரி­கிறது.

இன்­னும் ஒரு மாத காலத்­தில் நான்கு வகை­யான தடுப்­பூ­சி­கள் இந்­தி­யா­வில் உள்ள மக்­க­ளுக்­குப் போடப்­படும் என்று ஊட­கங்­கள் தெரி­வித்து உள்­ளன.

இந்­தி­யா­வில் கிரு­மிப் பர­வல் மட்­டுப்­பட்டு வரு­கிறது. 2020 செப்­டம்­பர் மாதம் உச்­சத்­தில் இருந்த அதன் எண்­ணிக்கை பின்­னர் படிப்­

ப­டி­யா­கக் குறை­யத் தொடங்­கி­யது.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி அங்கு பத்து மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். டிசம்­பர் மாதத்­தில் பர­வ­லின் வேகம் குறைந்து குண­ம­டை­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தது.

எந்­த­வொரு தடுப்­பூ­சி­யும் இல்­லாத நிலை­யில் கிரு­மி­யின் வேகம் தானா­கவே கட்­டுப்­பட்டு வரும் நிலை­யில் அங்கு அர­சாங்­கத்­தி­ட­மும் பொது­மக்­க­ளி­ட­மும் நம்­பிக்கை பிறந்து உள்­ளது. தடுப்­பூ­சிக்­கான அனு­மதி அந்த நம்­பிக்­கையை மேலும் கூட்டி உள்­ளது.

கொரோனா பாதிப்பு நில­

வ­ரத்தை நேற்­றுக் காலை விளக்­கிய சுகா­தார அமைச்சு, 24 மணி நேரத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 18,177 என்­றும் குண­

ம­டைந்­தோர் எண்­ணிக்கை 20,000 என்­றும் குறிப்­பிட்­டது.

கடந்த ஒரு வாரத்­திற்­கும் மேல் அன்­றா­டம் பதி­வா­கும் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை சரா­ச­ரி­யாக 20,000க்கும் கீழ் குறைந்­து­விட்­டது.

சில மாதங்­க­ளுக்கு முன்­னால், செப்­டம்­பர் மாதம் நாடு முழு­வ­தும் பர­வல் வேகம் அதி­க­மா­கக் காணப்­பட்­ட­தால் அந்த மாதத்­தின் ஒரு வார கால சரா­சரி தொற்று எண்­ணிக்கை 93,735ஆக இருந்­தது.

தற்­போது கொரோனா பாதிப்­பில் இருந்து மீண்­ட­வர்­கள் விகி­தம் 96.16 விழுக்­கா­டா­க­வும் உயி­ரி­ழந்­த­வர்­கள் விகி­தம் 1.45 விழுக்­கா­டா­க­வும் உள்­ளது. மேலும், தற்­போது சிகிச்­சை­யில் உள்­ள­வர்­க­ளின் விகி­தம் 2.39 விழுக்­காடு.

உயிரிழப்பு விகிதமும் இந்தியா வில் குறைந்து வருகிறது. இதுவரை அங்கு மரணமடைந்தோர் எண் ணிக்கை 1,49,435. அண்மை நாட் களாக அன்றாட மரணம் 300க்கும் கீழ் பதிவாகி வருகிறது.