சிங்கப்பூருக்குக் கூடுதல் தடுப்பூசிகள்

சிங்கப்பூருக்குக் கூடுதல் தடுப்பூசிகள்

1 mins read
286cb496-9692-485e-8cec-0b4669c75334
-

கூடுதல் தடுப்பூசிகள் அடுத்த சில மாதங்களில் சிங்கப்பூரை வந்தடையும். அமெரிக்க நிறுவனம் 'மாடர்னா' மற்றும் சீன நிறுவனம் 'சினோவாக்' ஆகியவற்றின் தடுப்பூசிகள் இவற்றில் உள்ளடங்கும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறார்.

டிசம்பர் மாதத்தின்போது 'ஃபைஸர் - பயோஎன்டெக் கொவிட்-19' தடுப்பூசிகளை குடியரசு தருவித்துள்ளது. எல்லாம் திட்டங்களின்படி செயல்பட்டால் 2021ஆம் ஆண்டின் முன்றாவது காலாண்டிற்குள் சிங்கப்பூருக்கு போதுமான கொவிட்-19 தொற்று மருந்துகள் இருப்பதாக திரு கான் கிம் யோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தடுப்பூசிகளைத் தயாரித்து விநியோகம் செய்யப்படுவதற்கும் நேரம் தேவைப்படலாம் என்று திரு கான் தமது அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட முதல் தடுப்பூசி 'ஃபைஸர் - பயோஎன்டெக்'. தேசிய தொற்றுநோய் தடுப்பு மன்றத்தைச் சேர்ந்த நாற்பது ஊழியர்கள் இந்நாட்டில் தடுப்பூசி மருந்தைப் பெற்ற முதல் நபர்களாவர்.