ஆறு வயது சிறுவனைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்

ஆறு வயது சிறுவனைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்

1 mins read
e5a7aa23-763c-4bd1-83be-8a0f1b12c646
-

ஹவ்காங்கிலுள்ள குடியிருப்புப் புளோக்கின் மூன்றாவது மாடியின் சன்னல் விளிம்பிலிருந்து ஆறு வயது சிறுவனை 'பூம் லிப்ட்' கருவியைப் பயன்படுத்தி காப்பாற்றினார் ஒரு வெளிநாட்டு ஊழியர். ஹவ்காங் ஸ்திரீட் 22 புளோக் 243 ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4ஆம் தேதி) காலை 7.50 மணிக்கு உதவிக்கான அழைப்பு கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.

குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்னர் அந்தச் சிறுவன் ஊழியரால் காப்பாற்றப்பட்டார். எஸ்சிடிஎப் மருத்துவ ஊழியரால் பரிசோதிக்கப்பட்ட அந்தச் சிறுவன், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான்.

வாட்ஸ்அப் காணொளி வழியாக பகிர்ந்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டபோது ஆரஞ்சு டி-சட்டையை அணிந்து அந்தப் பிள்ளை, சன்னல் விளிம்பில் நின்றுகொண்டிருந்தவாறு காணப்பட்டான். நீல நிற தலைக்கவசம் அணிந்த ஊழியர், பூம் லிப்டைப் பயன்படுத்தி சிறுவனை விளிம்பிலிருந்து இறக்கியதாக அந்தக் காணொளி காட்டியது.