மோசமடைந்த வெள்ள பாதிப்பு; 20,000 பேர் முகாம்களில் தஞ்சம்

மோசமடைந்த வெள்ள பாதிப்பு; 20,000 பேர் முகாம்களில் தஞ்சம்

1 mins read
0c50b721-fadc-4e45-a983-b4a6386d2d9f
மலேசியாவின் பாகாங் மாநிலம், லன்சாங்கில் வெள்ளத்தில் தத்தளித்தபடி உணவு வாங்கிச் செல்லும் ஆடவர். படம்: ஏஎஃப்பி -

மலே­சி­யா ­வில் வெள்­ளத்­ தால் பாதிக்­கப் ­பட்­டுள்ள ஐந்து மா நி­லங்­களில் நேற்று நண்­ப­கல் 1 மணி நில ­வ­ரப்­படி கிட்­டத்­தட்ட 20,000 பேர் நிவா ­ரண மையங்­களில் தங்­க ­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் சமூக நல்­வாழ்­வுத் துறை தெரி­வித்­தது. ஜோகூ­ரி­லும் திரெங்­கா­னு­விலும் வீடு­க­ளை­விட்­டு பாது­காப்­பான இடங்­களை நாடி­யோர் எண்­ணிக்கை குறைந்­துள்­ள­போ­தும் பாகாங், பேராக், கிளந்­தான் ஆகிய மாநி­லங்­களில் அந்த எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

பாகாங்­கில் பல ஆறு­களில் அபாய அள­வை­யும் தாண்டி வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­கிறது. அம்­மா­நி­லத்­தில் மட்­டும் 10,739 பேர் நிவா­ரண மையங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.ஜோகூ­ரில் நேற்­றுக் காலை­ நிலவரப்படி 7,112 பேர் நிவா­ரண மையங்­களில் இருந்த நிலை­யில், பின்­னர் அது 6,991ஆகக் குறைந்­தது.

"கோத்தா திங்­கி­யில் 20, குளுவாங்­கில் 19, ஜோகூர் பாரு­வில் பத்து, மெர்­சிங்­கில் ஆறு, கூலா­யில் ஐந்து, செகா­மட்­டி­லும் பொந்­தி­யா­னி­லும் தலா மூன்று, பத்து பகாட்­டில் இரண்டு என மொத்­தம் 68 நிவா­ரண மையங்­கள் திறக்­கப்­பட்­டுள்­ளன," என்று ஜோகூர் மாநி­லத்­தின் சுகா­தார, சுற்­றுச்­சூ­ழல் குழுத் தலை­வர் ஆர்.வித்­யா­நந்­தன் தெரி­வித்­தார்.

வாக­னங்­கள் நீரில் மூழ்­கி­ய­தால் கோத்தா திங்­கி­யில் 12 சாலை­கள் மூடப்­பட்­டுள்­ளன. இத­னி­டையே, திரெங்­கானு, பாகாங், ஜோகூர் ஆகிய மாநி­லங்­களில் இன்று வரை கன­மழை பெய்­யக்­கூ­டும் என்று மலே­சிய வானி­லை ஆய்வு மையம் எச்­ச­ரித்­து இருக்கிறது.