கொவிட்-19: சமூகத்தில் இருவர் பாதிப்பு

கொவிட்-19: சமூகத்தில் இருவர் பாதிப்பு

1 mins read
2bbac91d-3f42-494b-a69b-4733f15ed81c
-

சிங்கப்பூரில் புதிதாக 28 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தக் கிருமித்தொற்றுகளில் இரண்டு சமூகத்தில் ஏற்பட்டுள்ளன. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 58,749க்கு உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 26 பேர் வெளிநாட்டில் இந்நோயைத் தொற்றியவர்கள். இவர்களில் நால்வர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். 13 பேர் வெளிநாட்டு ஊழியர்கள்.

சமூக அளவில் இந்நோயைத் தொற்றியோரில் ஒருவர், பாதிக்கப்பட்ட 58,812 நபருடன் அணுக்கமான தொடர்பில் இருந்திருக்கிறார். 58,812ஆம் நபர் டிசம்பர் 17ஆம் தேதி இந்தோனீசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார்.