புதிய சட்டத்தில் இருந்து போலி ஆயுதங்களுக்கு விலக்கு

புதிய சட்டத்தில் இருந்து போலி ஆயுதங்களுக்கு விலக்கு

2 mins read
5a7d58e2-c191-4a2c-bb6e-521b8e5cdc54
புதிய சட்டத்திலிருந்து 'நெர்ஃப்' துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. படம்: அன்ஸ்பிளேஷ் -

சிங்­கப்­ பூ­ரில் துப்­ பாக்­கி­கள், வெடி­ பொ­ருட்­கள், ஆயு­தங்­கள் ஆகி­ய­ வற்றை ஒழுங்­கு ­ப­டுத்­தும் புதிய சட்­டம், உண்மை யானவைப்போல இருக்கும் போலி ஆயு­ தங்­க­ளுக்­குப் பொருந்­தாது என்று உள்­துறை துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் நேற்று நாடா­ளு­ மன்­றத்­தில் கூறி­னார். கடு­மை­யான ஒழுங்­கு­முறை நட­வ­டிக்கை தேவைப்­படும் அள­வுக்கு அத்­த­கைய ஆயு­தங்­கள் பெரி­ய­ள­வில் ஆபத்தை ஏற்­ப­டுத்த மாட்டா என்று அவர் விவ­ரித்­தார்.

பொழு­து­போக்­கிற்­காக வாங்­கப்­படும் 'நெர்ஃப்' ரக துப்­பாக்­கி­களைச் சரி­யாக பயன்­ப­டுத்­தி­னால் அவை காயம் விளை­விக்­கும் சாத்­தி­யம் குறைவு. எனவே துப்­பாக்­கி­கள், வெடி­பொ­ருட்­கள், ஆயு­தங்­கள் கட்­டுப்­பாட்டு மசோ­தா­வில் இருந்து 'நெர்ஃப்' துப்­பாக்­கி­க­ளுக்கு விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மசோதா நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டது.

இந்­தப் புதிய சட்­டத்­திற்கு முன்­பாக நடப்­பில் இருந்த ஆயு­தங்­கள், வெடி­பொ­ருட்­கள் சட்­டத்­தின்­கீழ் துப்­பாக்­கி­கள், வெடி­பொ­ருட்­கள், ஆயு­தங்­க­ளைக் கொண்டு நட­வ­டிக்­கை­களை நடத்­து­வோர் தனிப்­பட்ட முறை­யில் உரி­மம் பெற்­றி­ருக்க வேண்­டும்.

தங்­க­ளது ஆத­ர­வுக்­காக அவை­யில் இருந்­த­வர்­க­ளுக்கு நன்­றி­ கூறிய திரு டான், "சிங்­கப்­பூ­ரில் துப்பாக்­கி­கள், வெடி­பொ­ருட்­கள், ஆயு­தங்­கள் ஆகி­யவை பாது­காப்­பான, பொறுப்­புள்ள முறை­யில் கையாளப்­படு­வதை உறுதி செய்ய இந்­தச் சட்­டம் பெரி­தும் கைகொடுக்­கும்," என்­றார்.

துப்­பாக்­கி­கள், வெடி­பொ­ருட்­கள், ஆயு­தங்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­களைக் கடு­மை­யாக்­க­வும் தானி­யக்க ஆயு­தங்­கள் போன்ற அதிக அபா­யத்தை ஏற்­ப­டுத்­தும் ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு எதி­ரான தண்­ட­னை­க­ளைக் கடு­மை­யாக்­க­வும் இந்­தப் புதிய மசோதா நோக்­கம் கொண்­டுள்­ளது.

இத்­த­கைய ஆயு­தங்­கள் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில் இருந்­தும் முப்­ப­ரி­மாண அச்சு வடி­வத்­தில் துப்­பாக்­கி­கள் அல்­லது துப்­பாக்­கிப் பாகங்­கள் தயா­ரிக்­கப்­ப­டு­வ­தில் இருந்­தும் இந்தச் சட்­டம் பாது­காக்­கிறது.