சிங்கப்பூரில் இன்று புதிதாக 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58, 780 க்கு உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் இந்நோயைத் தொற்றிய 29 பேர் சிங்கப்பூரை வந்தடைந்தவுடன் அவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கடிதங்கள் கொடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். மற்ற 12 பேர் பணிப்பெண்கள்.
இந்தச் சம்பவங்களில் இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவை.

