விரைவு சோதனைக் கருவியைப் பயன்படுத்திய பிரதமர்

விரைவு சோதனைக் கருவியைப் பயன்படுத்திய பிரதமர்

1 mins read
03d24dbe-2d69-44c4-b111-554ac7868316
-

பிரதமர் லீ சியன் லூங், கொவிட்-19 சோதைனையை விரைவாக செய்வதற்கான கருவியைப் பயன்படுத்திய பின்னர் நேற்றை நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டார். தாம் மேற்கொண்ட சோதனை விரைவாகவும் வலியில்லாமலும் இருந்ததாக பிரதமர் தமது பேஸ்புக் பக்கத்தின் பதிவு ஒன்றில் எழுதியிருக்கிறார்.

மூன்றாம் கட்ட தளர்வு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வரும் சிங்கப்பூரில் இத்தகைய சோதனைகள் இனி அடிக்கடி நடக்கும் என்றும் அவர் கூறினார். இந்த விரைவு சோதனைக்கருவிகளின் மூலம் அறிகுறிகள் இல்லாத நோயாளிகளை உடனே அடையாளம் காண முடியும். பின்னர் அவர்கள் உடனே தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கப்பட முடியும் என்று திரு லீ எழுதியுள்ளார்.

"அப்போது நாம் சமூகத்தைப் பாதுகாப்பாக இருக்க வைக்கலாம். வாழ்க்கையும் வேலையும் இன்னும் இயல்பாகத் தொடரலாம்," என்று அவர் கூறினார்.