சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு 13 மடங்கு அதிக கடன்; 20,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் $17.4 பி. பெற்றன

கொவிட்-19 கிரு­மித்­தொற்று காலத்­தில் சிங்­கப்­பூர் நிறுவனங்கள் $17.4 பில்­லி­யன் அரசு ஆத­ரவுடன் கூடிய கட­னைப் பெற்­றுள்­ளன.

என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் நிறு­வனம் மேற்­பார்­வை­யி­டும் பல்­வேறு திட்­டங்­கள் மூல­மாக 20,000க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு அந்த அள­வுக்­குக் கடன் கிடைத்­துள்­ளது.

சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள், சென்ற ஆண்டு மார்ச் முதல் டிசம்­பர் வரை பெற்ற கடன் அளவு, 2019 ஆம் ஆண்டு முழு­வ­தற்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்ட, என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் ஆத­ரவு பெற்ற கட­னைப்­போல் 13 மடங்கு அதிகம் என்­பது குறிப்­பிடத்­தக்­கது.

கொவிட்-19 கார­ண­மாக நிறு­வ­னங்­க­ளுக்­குப் பல பாதிப்­பு­கள் ஏற்­பட்­டன. பணப் புழக்­கம் இன்றி அவை சிர­மத்தை எதிர்­நோக்­கின.

இத்­த­கைய ஒரு காலத்­தில் அவற்­றுக்கு உத­வு­வ­தற்­காக தற்­கா­லிக கடன் செயல்­திட்­டம் போன்ற பல திட்­டங்­கள் நடப்­புக்­குக் கொண்டு வரப்­பட்­டன.

சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 12 விழுக்­காட்­டுக்­குப் பொறுப்பு வகிக்­கும் மொத்த வர்த்­த­கத் துறை, இந்­தக் கடன் திட்­டங்­களால் அதிக பலன் அடைந்த துறை­களில் ஒன்று என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று தெரி­வித்­தார்.

கொவிட்-19 கார­ண­மாக இந்­தத் துறைக்கு ஏற்­பட்டு இருக்­கும் பாதிப்பு கொஞ்ச காலத்­துக்­குத்­தான் என்­றும் நீண்ட கால­ப்போக்கில் இந்­தத் துறைக்கு வளர்ச்சி வாய்ப்­ப­கள் நன்­றாக இருக்­கும் என்று சிங்­கப்­பூர் தொடர்ந்து நம்­பு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

மொத்த வர்த்­த­கத் துறை­யில் 50,000க்கும் அதிக நிறு­வ­னங்­கள் ஈடு­பட்டு இருக்­கின்­றன.

சிங்­கப்­பூர் ஊழி­யர் அணி­யில் 100 பேருக்கு 9 பேர் அல்­லது 32,000க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் இந்­தத் துறை­யில் வேலை பார்க்­கி­றார்­கள்.

அமைச்­சர் திரு சான், நேற்று எரி­பொ­ருள், உராய்வுக் குறைப்பு எண்­ணெய் ஆகி­ய­வற்றை விநி­யோ­கிக்­கும் ‘பிஎஸ் எனர்ஜி’ என்ற மொத்த வர்த்­தக நிறு­வ­னத்­திற்­குச் சென்­றார். பிறகு அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

மொத்த வர்த்­த­கத் துறைக்கு வரும் ஆண்­டு­களில் மூன்று அம்­சங்­கள் உருவம் ­கொ­டுக்­கும் என்று அமைச்­சர் விளக்கினார்.

பொருட்­கள், சேவை­கள் விநி யோகிக்கப்படுகின்ற அமைப்பு முறை­யி­லும் வர்த்­த­கப் போக்­கு­களி­லும் ஏற்­படும் மாற்­றம்; வழி­வ­ழி­யான ஆதாய வர்த்­த­கத்­தில் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பப் பயன்­பாடு அதி­க­ரிப்பு மற்­றும் அதிக வெளிப்­படைத்தன்மை; செயல்­மு­றை­களில் அதிக மீள்­தி­றன், நம்­ப­கத்­தன்மை, ஆற்­றல் ஆகி­ய­வற்­றுக்­கான வேட்கை ஆகி­யவை அந்த மூன்று அம்­சங்­கள் என்றார் திரு சான்.

கடன்­க­ளைக் கொடுப்­ப­து­டன் நின்­று­வி­டா­மல் இந்­தத் துறை­யைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்க தொழில்­நுட்­பங்­க­ளைக் கைக்­கொள்­வது போன்ற புதிய ஆற்­றல்­க­ளைப் பலப்­ப­டுத்தி மேம்­ப­ட­வும் அர­சாங்­கம் உதவி வரு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!