2020 நவம்பரில் முதல்முறையாக வேலையின்மை விகிதம் குறைந்தது

உள்ளூர்வாசிகளின் வேலை­யின்மை விகி­தம், சென்ற ஆண்டு நவம்­பர் மாதத்­தில் 4.6 விழுக்காட்டுக்கு குறைந்­தது.

இது அதற்கு முந்­தைய மாத­மான அக்­டோ­பரை விட சற்று குறைவு என்று மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது. அக்­டோ­பர் மாதத்­தில் உள்­ளூர்­வாசி­க­ளின் வேலை­யின்மை விகி­தம் 4.8 விழுக்­கா­டாக இருந்­தது.

இந்­நி­லை­யில் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வேலை­யின்மை விகி­தத்­தி­லும் சிறிது முன்­னேற்­றம் தெரிந்­தது.

அக்­டோ­பர் மாதத்­தில் 4.9 விழுக்­கா­டாக இருந்த சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வேலை­யின்மை விகி­தம், நவம்­பர் மாதத்­தில் 4.7 விழுக்­கா­டாகக் குறைந்­தது.

ஒட்­டு­மொத்த வேலை­யின்மை விகி­தம் நவம்­பர் மாதத்­தில் 3.3 விழுக்­கா­டாகப் பதி­வா­கி­யது. இது அக்­டோ­பர் மாதத்­தில் 3.6 விழுக்­கா­டாக இருந்­தது.

ஜூரோங் ஈஸ்ட்­டில் உள்ள வேலை நிய­மன, வேலைத்­த­குதி கழ­கத்­திற்கு (இ2ஐ) நேற்று வருகை தந்த மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ இப்­புள்­ளி­வி­வ­ரங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார்.

வேலை­யின்மை விகி­தம் சற்று குறைந்­துள்­ளதை ‘ஆறு­தல் அளிக்­கும் ஒன்று’ என்று அவர் குறிப்­பிட்­டார். இருப்­பி­னும், வேலைச் சந்தை நெருக்­க­டி­யி­லி­ருந்து மீண்டு­விட்­டது என்று கூறி­விட முடி­யாது என்­றும் நாட்­டின் வேலை விகி­தம் போன்ற மற்ற குறி­யீ­டு­க­ளு­டன் வேலை­யின்மை விகி­தத்தை ஆராய வேண்­டும் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார். வேலை விகி­தம் தொடர்­பான மிக அண்­மைய புள்­ளி­வி­வ­ரங்­கள் இம்­மாத இறு­தி­யில் வெளி­யி­டப்­படும்.

“வேலைச் சந்தை தொடர்­பான புள்­ளி­வி­வ­ரங்­களை ஒட்­டு­மொத்த நிலை­யில் பார்ப்­பது அவ­சி­யம் என்று நான் எப்­போ­துமே எச்­ச­ரித்­துள்­ளேன். இது­வரை வெளி­யா­கி­யுள்ள வேலை நில­வர அறிக்­கை­க­ளைப் படித்து வந்­த­வர்­க­ளுக்கு இது தெரி­யும். வேலை­யின்மை விகி­தம் என்­பது ஓர் அம்­சமே.

“நம் ஊழியர் அணி­யின் பங்­கேற்பு அதி­க­ரித்­துள்­ளதா அல்­லது குறைந்­துள்­ளதா என்­பதை அறிய நாம் வேலை­வாய்ப்பு அளவை­களை ஆராய வேண்­டும்,” என்­றார் திரு­மதி டியோ.

வேலைச் சந்தை மீண்­டு­வ­ரும் பய­ணம் சற்று கர­டு­மு­ர­டா­னது என்று கூறிய அமைச்­சர், அர­சாங்­கம் தொடர்ந்து எச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­படும் என்­றார்.

கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் வர்த்­த­கங்­களுக்கு நீண்ட காலப் பாதிப்­பு­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அவர் சொன்­னார்.

இத­னால் திறன் மேம்­பாட்­டில் கவ­னம் செலுத்த ஊழி­யர்­க­ளுக்­கும் நெருக்­கு­தல் உண்­டா­கும் என்­றார்.

இதற்­கி­டையே ஊழியர் அணி­யில் உள்­ளூர்­வா­சி­க­ளின் எண்­ணிக்­கையை வலு­வா­கத் தக்­க­வைக்­கும் முயற்­சி­களை எடுத்­து­வரும் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ், சிங்­கப்­பூர் தேசிய முத­லாளி­கள் சம்­மே­ள­னம் ஆகி­ய­வற்­றுக்கு திரு­மதி டியோ தம் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

ஒரு­வ­ருக்­குப் பொருத்­த­மான வேலை­யைத் தேடும் முயற்­சி­களில் என்­டி­யுசி வேலை பாது­காப்பு மன்­றத்­தைச் சேர்ந்த 10,000 முத­லா­ளி­கள் முக்­கிய பங்­க­ளிப்­ப­தாக ‘இ2ஐ’க்கு வருகை தந்த என்­டி­யு­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் கூறி­னார்.

தொடர்ந்து 2021ஆம் ஆண்­டில் தொழி­லா­ளர் அணி சந்­திக்­கக்­கூடிய சவால்­க­ளுக்­கி­டையே ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு அளிப்­ப­தில் என்­டி­யுசி கவ­னம் செலுத்­தும் என்று திரு இங் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!