அடுத்தகட்ட தடுப்பூசி பணி

அடுத்தகட்ட தடுப்பூசி பணி

2 mins read
8e794f50-e3be-4dfb-8a29-ecb7e72356d4
-

தனி­யார் சுகா­தா­ரப் பரா ­ம­ரிப்­புத் துறை ­யி­ன­ருக்கு தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை நேற்று தொடங்­கி­யது.

பார்க்வே பண்­டாய் மருத்­து­வக் குழு­மத்­தைச் சேர்ந்த 50 பணி­யா­ளர்­க­ளுக்கு ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூசி மருந்து செலுத்­தப்­பட்­டது. இரு வெவ்­வேறு இடங்­களில் தடுப்­பூசி போடும் நிகழ்­வுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு இருந்­தது. மவுண்ட் எலி­ச­பெத் நொவினா மருத்­து­வ­ம­னை­யில் மருத்­து­வர்­கள், தாதி­யர் என 30 பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டது. அதே­போல, ஆர்ச்­சர்ட் பகு­தி­யில் உள்ள மவுண்ட் எலி­ச­பெத் மருத்­து­வ­

ம­னை­யில் மேலும் 20 பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர். நொவினா மருத்­துவ­ம­னை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களில் பார்க்வே பண்­டா­யின் மூத்த நிர்­வா­கி­களும் மருத்­து­வ­ம­னை­யின் தொற்­று­நோய் தடுப்பு மருத்­து­வர்­களும் அடங்­கு­வர். தங்­க­ளது சக பணி­யா­ளர்­கள் தடுப்­பூசி போட தயக்­கம் காட்­டக்­கூ­டும் என்­ப­தால் முன்­னு­தா­ர­ண­மா­கத் திக­ழும் நோக்­கில் தாங்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

தமது இடது கையில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தா­கக் கூறிய பார்க்வே பண்­டா­யின் சிங்­கப்­பூர் செய­லாக்­கப் பிரி­வின் தலைமை நிர்­வாகி டாக்­டர் பிரேம் குமார் நாயர், "பிர­த­மர் கூறி­ய­து­போ­லவே வலி இல்லை. தடுப்­பூசி செயல்­தி­றன் மிக்­கது என்­ப­தோடு அவ­சி­ய­மா­னது," என்று கூறி­னார். சிங்­கப்­பூர் முழு­வ­தும் உள்ள பொது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளின் பணி­யா­ளர்­க­ளுக்கு தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கை­யின் தொடக்­க­மாக பிர­த­மர் லீ சியன் லூங் வெள்­ளிக்­கி­ழமை காலை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டார். அடுத்த சில வாரங்­களில் தங்­க­ளது குழு­மத்­தின் மேலும் பல பணி­யா­ளர்­கள், தற்­கா­லிக ஊழி­யர்­கள், கடைக்­கா­ரர்­கள் ஆகி­யோ­ருக்கு தடுப்­பூசி போடப்­படும் என்று டாக்­டர் பிரேம் கூறி­னார். நாளை திங்­கட்­கி­ழமை அவர்­களில் பல­ருக்கு தடுப்­பூசி போடப்­படும்.

"கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்­றி­னோம். சொந்த சுகா­தா­ரத்­தைப் பின்­பற்­றி­னோம். இருப்­பி­னும் ஒன்று மட்­டும் பாக்கி இருந்­தது. அது­தான் தடுப்­பூசி. அத­னை­யும் இப்­போது எடுத்­துக்­கொண்­டோம். இதற்­கா­கத்­தான் நங்­கள் காத்­தி­ருந்­தோம், என்று மவுண்ட் எலி­ச­பெத் நொவினா மருத்­து­வ­மனை தாதி­யர் பயிற்­று­நர் நூர்­சி­யா­ஹிடா அப்­துல் ரஹிம், 35, என்­ப­வர் கூறி­னார்.

பார்க்வே பண்டாய் குழும மருத்துவர்கள், தாதியர் என 50 பேர் போட்டுக்கொண்டனர்