நடுக்கடலில் மாயமான விமானம்; கரும்பெட்டி கண்டுபிடிப்பு

நடுக்கடலில் மாயமான விமானம்; கரும்பெட்டி கண்டுபிடிப்பு

1 mins read
9a603954-484c-484a-8a71-3575cd3c5b58
-

ஸ்ரீவிஜயா ஏர் போயிங் 737 விமானத்திற்கான தேடுதலை நடத்தி வரும் அதிகாரிகள், விமானத்தின் கரும்பெட்டியிலிருந்து வெளிவரும் சமிக்ஞைகளைக் கண்டுபிடித்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ளதாக தேடுதல், மீட்புக் குழுவினர் இந்தோனீசிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

கரும்பெட்டியைக் கண்டுபிடிக்க உதவும் அவசரகால சமிக்ஞையை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்திருப்பதாக இந்தோனீசியாவின் பர்சானாஸ் அமைப்பு கூறியுள்ளது. அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் முக்குளிப்பாளர்கள் அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்த விமானத்திலிருந்து கசிந்த எண்ணெய் கசிவு லாக்கி தீவுக்குத் தெற்கிலுள்ள கடற்பகுதியின்மீது காணப்பட்டதாக இந்தோனீசிய கடற்படை தெரிவித்திருந்தது.

விமானத்தைச் சேர்ந்திருப்பதாக நம்பப்படும் அதன் சக்கரத்தின் ஒரு பகுதி, கிழிந்துபோன எக்கு உலோகத் தாள், இளஞ்சிவப்பு நிற பிள்ளைகளின் கால்சட்டை போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.