சிங்கப்பூரில் புதிதாக 45 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 59,029க்கு உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் 44 பேர் வெளிநாட்டில் கிருமியைத் தொற்றி இங்கு வந்தவர்கள். இவர்கள் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றுகின்றனர் .
கடந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதியன்று புதிய கிருமித்தொற்று எண்ணிக்கையான 48 சம்பவங்கள் பதிவான பிறகு இந்த எண்ணிக்கை ஆக அதிகமானது. புதிய எண்ணிக்கையில் ஒன்று சமூகத்தைச் சேர்ந்தது. ஊழியர் தங்கும் விடுதிகளில் இன்று புதிதாக எவரும் பாதிக்கப்படவில்லை

