2022ல் சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம்

சென்னை மீனம்­பாக்­கத்­தில் தற்­போ­துள்ள விமான நிலை­யத்­துக்­குப் பதி­லாக புதிய முனை­யம் 2022ஆம் ஆண்­டி­லி­ருந்து செயல்­படத் தொடங்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­நாடு, அனைத்­து­லக விமான முனையங்களை இணைக்­கும் வகை­யில் புதிய முனை­யத்தை அமைக்க கடந்த 2018ஆம் ஆண்டு மத்­திய அரசு ஒப்­பு­தல் வழங்­கி­யது.

இத­னால் தற்­போ­துள்ள இரண்டாவது மற்­றும் மூன்­றா­வது முனை­யம் இடிக்­கப்­பட்டு 218,000 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் புதிய ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட முனை­யம் உரு­வாக்­கப்­படும்.

இந்­தப் புதிய முனை­யம் 2022ஆம் ஆண்டு இறு­திக்­குள் செயல்­பாட்­டுக்கு வரும் என இந்­திய விமான நிலைய ஆணை­யம் தற்­போது கூறி­யுள்­ளது.

இது தொடர்­பாக வெளி­யிட்டுள்ள அறிக்கை ஒன்­றில், "புதிய முனை­யம் அமைக்­கும் இந்­தத் திட்­டம் இரண்டு கட்­டங்­க­ளாக நிறை­வேற்­றப்­படும்.

"முதல் கட்­டத்­தில் ஏற்­கெ­னவே இருக்­கும் இரண்­டா­வது முனை­யம் இடிக்­கப்­பட்டு அங்கு புதிய முனை­யத்தை அமைத்து அதை வரு­கிற ஜூன் மாதத்­துக்­குள் செயல்­பாட்டுக்­குக் கொண்டு வர திட்­ட­மி­டப்­பட்டுள்­ளது.

"இரண்­டா­வது கட்­டத்­தில் மூன்­றா­வது முனை­யம் இடிக்­கப்­பட்டு அந்த இடத்­தில் புதிய முனை­யம் கட்­டப்­படும்," என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

இதை­ய­டுத்து ஒருங்­கி­ணைக்­கப் பட்ட புதிய முனை­யம், "2022ஆம் ஆண்டு இறு­தி­யில் செயல்­படத் தொடங்­கும்," என்று ஆணை­யம் மேலும் கூறி­யது.

வாக­னங்­களை நிறுத்த அடுக்கு­மாடி வசதி, பேரங்­கா­டி­கள், கலை­அரங்­கங்­கள், நவீன வச­தி­க­ளு­டன் முக்­கிய பிர­மு­கர்­க­ளுக்­கும் முதி­யோ­ருக்­கும் ஓய்வு விடுதி போன்­ற­வை­யும் இத்­திட்­டத்­தில் அடங்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

2018ஆம் ஆண்­டி­லேயே தொடங்­கிய கட்­டு­மானப் பணி­கள், கொரோனா கிருமி பீதி, ஊர­டங்கு கார­ண­மாக கடந்த மார்ச் மாதம் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!