ஆயர் ராஜா விரைவுச்சாலையில் விபத்து

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் விபத்து

1 mins read
4998f9e5-7560-4730-8c68-455ca718ae07
-

மரினா கோஸ்டல் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையிலுள்ள 4.5 மீட்டர் மேம்பாலச் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியை மோதிய மற்றோர் லாரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் இன்று காலை 7.07 மணிக்கு போலிசாரிடம் தெரிவிக்கப்பட்டது. இதில் எவரும் காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளிவரவில்லை. இந்த விபத்தால் கிளமெண்டி 2 வெளிவாயிலுக்கு அருகிலுள்ள சாலைப்பகுதி அடைக்கப்பட்டிருந்தது. அங்கு பல மணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விசாரணை தொடர்கிறது.