கொவிட்-19 சூழலிலும் $17.2 பில்லியன் முதலீடுகளை ஈர்த்த சிங்கப்பூர்

சிங்­கப்­பூர் கடந்த ஆண்டு $17.2 பில்­லி­யன் அள­வுக்கு நிலை­யான சொத்து முதலீடுகளைப் பெற்­றுள்­ளது.

கொவிட்-19 சூழ­லால், நாடு சுதந்­தி­ரம் அடைந்­தது முதல் சந்­தித்­தி­ராத மோச­மான பொரு­ளி­யல் நெருக்­க­டிக்கு இடை­யி­லும் இந்த முத­லீ­டு­களை சிங்­கப்­பூர் பெற்­றுள்­ளது. மேலும், பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கத்­தின் இடைக்­கா­லம் முதல் நீண்­ட­கா­லம் வரை­யி­லான இலக்­கு­க­ளை­யும் மீறி சாதனை அளவு முத­லீ­டு­கள் கிடைத்­துள்­ளன.

2020ஆம் ஆண்­டில் $8 பில்­லி­யன் முதல் $10 பில்­லி­யன் வரை­யி­லான நிலை­யான சொத்து முத­லீ­டு­களை சிங்­கப்­பூர் ஈர்க்­கும் என கழ­கம் முன்­னு­ரைத்து இருந்­தது. மற்­றொரு சாத­னை­யாக 2019ஆம் ஆண்­டில் $15.2 பில்­லி­யன் முத­லீ­டு­க­ளை­யும் கடந்த ஆண்­டின் முத­லீட்டு அளவு முறி­ய­டித்து உள்­ளது.

அது மட்­டு­மின்றி, 2008ஆம் ஆண்­டுக்­குப் பிறகு ஆகப்­பெ­ரிய முத­லீ­டு­கள் கடந்த ஆண்­டில்­தான் கிடைத்­தன. 2008ஆம் ஆண்­டில் $18 பில்­லி­ய­னுக்­கும் மேலான முத­லீ­டு­களை சிங்­கப்­பூர் ஈர்த்­தது.

மின்­னி­யல், ரசா­ய­னம், ஆராய்ச்சி மற்­றும் வளர்ச்சி போன்ற துறை­களில் அதி­கப்­ப­டி­யான மூல­தன முத­லீ­டு­கள் வரப்­பெற்­றது ஒட்­டு­மொத்த முத­லீ­டு­கள் உய­ரக் கார­ண­மாக அமைந்­தது. இந்த விவ­ரங்­களை கழ­கம் தனது வரு­டாந்­திர ஆய்­வ­றிக்­கை­யில் வெளி­யிட்டு உள்­ளது.

இது தொடர்­பாக நேற்­றுக் காலை வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் ஊட­கத்­தி­ன­ரி­டம் பேசி­னார். “எல்­லை­க­ளைத் திறப்­ப­தில் நாம் எடுத்து வரும் முயற்­சி­கள், வெளிப்­பு­றத் தொடர்­பு­க­ளைப் பரா­ம­ரித்­தல், வர்த்­த­கத் தொடர்ச்சி போன்ற அம்­சங்­கள் சிங்­கப்­பூ­ரி­லேயே தங்­க­ளது வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளைத் தொட­ரும் நம்­பிக்­கையை உலக நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கின,” என்று அவர் அப்­போது குறிப்­பிட்­டார்.

இப்­போது கிடைத்­தி­ருக்­கும் முத­லீ­டு­கள் அனைத்­தும் செயல்­பாட்­டுக்கு வரும்­போது அவற்­றின் மூலம் அடுத்த ஐந்­தாண்டு

களுக்கு 19,352 வேலை­கள் உரு­வா­கும். மேலும், திட்­ட­மி­டப்­பட்ட $31.2 பில்­லி­யன் வரு­டாந்­திர மதிப்­புக் கூட்­டுப் பங்­க­ளிப்­பை­யும் அந்த முத­லீ­டு­கள் ஏற்­ப­டுத்­தும். நிறு­வ­னம் ஒன்று சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­திக்கு நேர­டி­யா­கப் பங்­க­ளிப்­பதே மதிப்­புக் கூட்டு நட­வ­டிக்கை. ஊழி­யர்­கள் சம்­ப­ளம் மற்­றும் நிறு­வன லாபம் போன்ற அம்­சங்­க­ளை­யும் அது உள்­ள­டக்­கும்.

இதற்கு முன்­னர் 2019ஆம் ஆண்­டில் கிடைத்த முத­லீ­டு­கள் மூலம் 33,000 வேலை­கள் கிடைக்­கும் என்­றும் வரு­டாந்­திர மதிப்­புக் கூட்டு நட­வ­டிக்­கைக்கு $29.4 பில்­லி­யன் பங்­க­ளிப்பு கிடைக்­கும் என்­றும் கணிக்­கப்­பட்­டது.

புதிய முத­லீ­டு­கள் மூலம் ஆராய்ச்சி மற்­றும் வளர்ச்­சி தொழில்­து­றை­யில் அடுத்த ஐந்­தாண்­டு­களில் 4,200 வேலை­கள் உரு­வா­கும். அவற்­றில் 3,000க்கும் மேற்­பட்ட வேலை­கள் அத்துறை­யின் தலைமை அலு­வ­ல­கங்­க­ளுக்­கும் நிபு­ணத்­து­வச் சேவை­க­ளுக்­கும் பங்­க­ளிக்­கும்.

அது குறித்து தமது உரை­யில் குறிப்­பிட்ட அமைச்­சர் சான், “உரு­வாக்­கப்­படும் வேலை­களில் நமது ஊழி­யர்­களை அமர்த்­து­வ­தன் தொடர்­பில்­தான் நமது கவ­னம் தொடர்ந்து இருக்­கும். மேலும், காலி­யாக உள்ள வேலை­க­ளுக்கு உள்­ளூர் ஊழி­ய­ர­ணி­யைத் தயார்ப்­ ப­டுத்­து­வ­தில் நிறு­வ­னங்­கள் அணுக்­க­மா­கப் பணி­யாற்­றும் கடப்­பாட்­டைத் தொட­ரும்,” என்­றார்.

அடுத்த சில ஆண்­டு­களில் உரு­வாக்­கப்­படும் 19,000க்கும் மேற்­பட்ட வேலை­களில் 45 விழுக்­காடு உற்­பத்­தித் துறை­யில் அமை­யும். செயல்­முறை பொறி­யா­ளர்­கள், நிர்­வாக உத­வி­யா­ளர்­கள், விநி­யோ­கத் தொடர் நிர்­வா­கி­கள் போன்ற வேலை­கள் அவற்­றுள் அடங்­கும்.

நோய்ப் பரவல் சூழலிலும் கடந்த ஆண்டில் அதிக முதலீடுகளை சிங்கப்பூர் ஈர்த்தது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!