சிங்கப்பூர்-ஜோகூர் பாரு ரயில் இணைப்புத் திட்டம்: கட்டுமானப் பணிகள் தொடங்கின

சிங்கப்பூர்-ஜோகூர் பாரு ரயில் இணைப்­புத் திட்­டம் (ஆர்­டி­எஸ்) வரும் 2026ஆம் ஆண்டு இறு­தி­யில் செயல்­ப­டத் தொடங்­கும்­போது, ரயில் கடற்­பா­லம் வழி­யாக சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஜோகூர் பாரு­வுக்­குச் செல்­லும் பய­ணி­க­ளுக்கு உட்­லண்ட்ஸ் நார்த்­தில் உள்ள ரயில் முனை­யம், குடி­நு­ழைவு வளா­கம் ஆகி­யவை சேவை­யாற்­றும்.

இது சாதா­ராண எம்­ஆர்டி நிலை­யத்­தைக் காட்­டி­லும் பத்து மடங்கு பெரி­ய­தாக இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நிலத்­துக்கு அடி­யில் 28 மீட்­டர் ஆழத்­தில் அமைக்­கப்­படும் உட்­லண்ட்ஸ் நார்த் நிலை­யத்­தில் இரண்டு கீழ்த்­தள மாடி­கள், சுங்­கம், குடி­நு­ழைவு, தனி­மைப்­ப­டுத்து­தல் கட்­ட­டத்தை இணைக்­கும் நிலத்­த­டித் தளம் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய மூன்று மாடி­கள் இருக்­கும்.

அது நிலத்­தடி சுரங்­கப்­பாதை வழி­யாக தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை (டிஇ­எல்) நிலை­யத்­து­டன் இணைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

அங்­குள்ள ரயில் சுரங்­கப் பாதை­கள், ஜோகூர் நீரி­ணை­யைக் கடந்து செல்­லும் 25 மீட்­டர் உய­ர­முள்ள ரயில் கடற்­பா­லத்­து­டன் இணைக்­கப்­படும்.

உட்­லண்ட்ஸ் நார்த் ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து புறப்­படும் பய­ணி­கள் ஐந்து நிமி­டங்­களில் ஜோகூர் பாரு­வில் உள்ள புக்­கிட் சாகார் ரயில் நிலை­யத்­தைச் சென்­ற­டை­வர்.

அந்த ரயில் சேவை­யில் ஒவ்­வொரு திசை­யி­லும் ஒவ்­வொரு மணி நேரத்­துக்கு 10,000 பய­ணி­கள் பய­ணம் செய்­ய­லாம்.

உட்­லண்ட்­சில் அமை­ய­வுள்ள ரயில் முனை­யத்­தில் நில அகழ்வு நிகழ்ச்­சி­யின்­போது, நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் இந்த 4 கிலோ மீட்­டர் தூரம் கொண்ட ரயில் இணைப்­புத் திட்­டத்­தின் விவ­ரங்­களை வெளி­யிட்­டது.

இந்த ரயில் இணைப்­புத் திட்­டத்­தின் வர்த்­தக வாய்ப்­பு­கள், அமைப்­பு­முறை, செல­வு­கள் ஆகி­ய­வற்­றைப் பரி­சீ­லிப்­ப­தற்கு மலே­சியா விடுத்த கால நீட்­டிப்பு அவா­கா­சத்­துக்­குப் பிறகு, கடந்த ஆண்டு ஜூலை­யில் ரயில் இணைப்­புத் திட்­டத்­தின் தொடக்­கத்­தைக் குறிக்க ஜோகூர் கடற்­பா­லத்­தில் சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் ஒரு கூட்டு நிகழ்ச்­சியை நடத்­தின.

நேற்­றைய நில அகழ்வு நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங், “ரயில் இணைப்­புத் திட்­டம் மீண்­டும் தொடங்­கு­வது இரு நாட்டு மக்­க­ளின் இணைப்­பை­யும் உற­வை­யும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு மைல்­கல்,” என்­றார்.

“ஜோகூர் பாரு­வில் உள்ள புக்­கிட் சாகார் நிலை­யத்­தின் நில அகழ்வை மலே­சியா கடந்த ஆண்டு நவம்­ப­ரில் தொடங்கி விட்­டது. இத்­திட்­டம் வெற்­றி­பெற இரு நாடு­களும் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருப்­பது குறித்து மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன். நிர்­ண­யிக்­கப்­பட்ட காலக்­கெ­டு­வுக்­குள் அதா­வது 2026 இறு­திக்­குள் இத்­திட்­டத்தை நிறைவு­செய்ய இரு நாடு­களும் கடு­மை­யாக உழைக்­கும் என்று நம்­பிக்கை கொண்­டுள்­ளேன்,” என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

ஆர்­டி­எஸ் ரயில் திட்­டம் பற்­றிய விவ­ரங்­களை பொது­மக்­கள் மூன்று மாதங்­க­ளுக்­குப் பார்­வை­யிட ஒரு கண்­காட்­சியை மலே­சியா கடந்த வாரம் தொடங்­கி­யது.

ஜோகூர் கடற்­பா­லத்­தில் நில­வும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைக்­கும் ரயில் இணைப்­புத் திட்­டத்­தின் பய­ணம் குறை­வா­ன­து­தான் என்­றா­லும் அதன் பொரு­ளி­யல், சமூகப் பலன்­கள் குறிப்­பி­டத்­தக்­கவை என்­றார் திரு ஓங்.

“ரயில் இணைப்­புத் திட்­டத்­தின் நிலை­யங்­கள் உள்­ளூர் போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­மைப்­பு­க­ளு­டன் இணைக்­கப்­படும். ஆர்­டி­எஸ், டிஇ­எல் நிலை­யங்­க­ளு­டன் இணைக்­கப்­பட்­டுள்ள போக்­கு­வ­ரத்து மையம் உட்­லண்ட்­சில் அமை­யும்.

“இந்­தப் போக்­கு­வ­ரத்து இணைப்­பு­க­ளு­டன் கொண்ட பெரிய மேம்­பாட்­டுத் திட்­டங்­கள் உட்­லண்ட்சை, ஜூரோங், தெம்­ப­னிஸ் போன்று முக்­கிய வளர்ச்சி மைய­மா­க­வும் வேலை­வாய்ப்பு நுழை­வா­யி­லா­க­வும் உரு­வாக்­கும்,” என்­றும் அமைச்­சர் விவ­ரித்­தார்.

இரு நாட்டு நிலை­யங்­க­ளி­லும் சிங்­கப்­பூர், மலே­சி­யா­வின் குடி நுழைவு வளா­கங்­கள் அமைந்­தி­ருக்­கும் என்­ப­தால் அந்­தந்த நாட்டை விட்டு புறப்­படும் பய­ணி­கள் ஒரு­முறை மட்­டுமே குடி­நு­ழைவு செயல்­பா­டு­களை நிறை­வேற்ற வேண்­டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon