சிங்கப் பூரில் பயன் படுத்தப் படும் ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி போன்ற கொவிட்-19 தடுப் பூசிகள் பிரிட்டன், தென்னாப் பிரிக்க நாடு களில் கண்டறி யப்பட்ட உருமாறிய கொ ரோனா கிருமி களுக்கு எதி ராகவும் செயல் படக்கூடியவை.
மனித உயிரணுக்களைப் பாதிக்க வைரஸ் கிருமிகள் பயன்படுத்தும் முழு புரதத்திற்கும் எதிராக எதிர்ப்புசக்தியை உருவாக்க தடுப்பூசிகள் உடலுக்கு உதவுகின்றன. அதேவேளையில், கிருமிகளில் ஏற்படும் உருமாற்றங்கள் பெரும்பாலும் புரதத்தின் முனையில் மட்டுமே நிகழ்கின்றன என்று விளக்கினார் டியுக்-சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் தொற்று நோய்கள் நிபுணர் ஓய் எங் இயோங்.
காலப்போக்கில், அதிகமான வைரஸ் கிருமிகள் உருமாற்றம் காணும். ஆனால் அதன் எல்லாப் பகுதியும் மாறாது என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.பிரிட்டனில் கண்டறியப்பட்ட B117 உருமாற்றக் கிருமியும், 501Y.V2 என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க உருமாற்றக் கிருமியும் உலக சுகாதாரத் துறைக்கு கவலை தந்துள்ளன. இவை மனித உயிரணுவைப் பாதிக்கும் ஒரே வகையான உருமாற்றத்தைப் பகிர்ந்துகொள்கின்றன என்ற பேராசிரியர் ஓய், கிருமி யின் செயல்பாட்டையும் தடுப்பூசி மருந்துகள் அதை எவ்வாறு செயலிழக்கச் செய்கின்றன என்பதையும் விளக்கினார். இவரது கருத்துகளை வெளிநாட்டு வல்லுநர்களும் எதிரொலித்தனர்.
B117 உருமாற்றக் கிருமிக்கு எதிராக பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி திறம்படச் செயல்படுவதாக இரண்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆய்வுக்கூட அறிக்கைகள் சுட்டுகின்றன.சோதனைக் குழாயில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், தடுப்பூசி போடப்பட்ட 16 நோயாளிகளின் ரத்தத்தில் காணப்பட்ட 'ஆன்டிபாடிகள்' B117 உருமாற்றக் கிருமி களைச் செயலிழக்கச் செய்தது அறியப்பட்டது. இவர்களில் பாதிப் பேர் 55 வயதுக்கும் மேற்பட்டவர்கள். மருத்துவ இணையத்தளமான 'பயோரிஸ்'வில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்த முடிவுகள், இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.
"புதிய உருமாற்றக் கிருமிகளால் ஏற்படும் கொவிட்-19ஐ தடுப்பதில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறனை அறிய கூடுதல் தகவல்கள் தேவை," என்று இந்நிறுவனங்கள் புதன்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
தேவையெனில், எதிர்கால உருமாற்றக் கிருமிகளை எதிர்கொள்ளத் தேவையான மாற்றங்களை செய்வதில் தடுப்பூசியை உருவாக்க பயன்படுத்தப்படும் 'மெசஞ்சர் ஆர்என்ஏ' (எம்ஆர்என்ஏ) தொழில்நுட்பம் மிகவும் பொருத்தமானது என்றும் அறிக்கை சுட்டியது.
"புதிய உருமாற்றக் கிருமியின் எம்ஆர்என்ஏ வரிசையை எடுத்து அதை தடுப்பூசி மருந்தில் செலுத்தி தடுப்பூசி மருந்தில் சிறு மாற்றத்தை எளிதாக செய்யலாம்.
"இதுவரை செய்யப்பட்டுள்ளதைப்போல விரிவான சோதனைகள் இதற்குத் தேவையில்லை.சோதனைகள் தடுப்பூசி மருந்து பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட மருந்தால், முன்னைய மருந்தின் அதே திறனான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும்," என்றார் பேராசிரியர் ஓய்.
உருமாற்றக் கிருமிகள் குறித்து சிங்கப்பூரர்கள் கவலைப்படத் தேவையில்லை. தடுப்பூசியை மேம் படுத்தும் சாத்தியக்கூறுகள் உள் ளன. தடுப்பூசி திறம்பட விநியோகிக்கப்படுதும்; அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிபடுத்துவதும், தடுப்பூசி மருந்து குறித்த தவறான தகவல்களைத் திருத்த போதிய வளங்களை வழங்குவதும், தடுப்பூசி போடுவதா வேண்டாமா எனும் முடிவு சரியான தகவல்களுடன் செய்யப்படுவதை உறுதி செய்வதுமே அதிக முக்கியமானது என்று பேராசிரியர் ஓய் குறிப்பிட்டார்.

