சிங்­கப்­பூர் ராட்டினத்துக்குச் சென்று களித்த வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
e437cd21-41b1-4526-b925-21398e8abe19
சுமார் 600 வெளிநாட்டு ஊழியர்கள் நேற்று சிங்கப்பூர் ராட்டினத்தை நேரே சென்று கண்டு அனுபவித்து மகிழ்ந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடுதி­க­ளைச் சேர்ந்த சுமார் 620 பேர் நேற்று சிங்­கப்­பூர் ராட்டினத்துக்குச் சென்று அதை அனு­பவித்து மகிழ்ந்­த­னர்.

'இட்ஸ் ரெயினிங்ரெயின் கோட்ஸ்' (ஐஆர்­ஆர்) என்ற லாப­நோக்­கற்ற அமைப்பும் லுக், சிங்­கப்­பூர் ஃபிளையர் ஆகிய அமைப்பு ­களும் சேர்ந்து இந்­த மகிழ் உலாவுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

உள்­ளூர் மக்­கள் நன்­கொ­டை­யாக வழங்கி இருந்த 'சிங்­கப்­பூரை மீண்­டும் ரசிப்­ப­தற்­கான சுற்­றுலா பற்­றுச்­சீட்­டு­க­ளைப்' பயன்­ப­டுத்தி இந்­தப் பய­ணத்­திற்­கு­ரிய கட்­ட­ணத்தை ஐஆர்­ஆர் அமைப்பு செலுத்­தி­யது.

ராட்­டி­னத்தை அதன் உள்ளே சென்று பார்­வை­யிட்ட ஊழி­யர்­களில் ஒரு­வ­ரான எம்.வி. மாறன், 30, என்ற கட்­டு­மா­னத் துறை ஊழி­யர், தான் செங்­காங்­கில் அடுக்­கு­மாடி வீடு கட்­டும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்தபோது அங்­கி­ருந்து ராட்­டி­னத்­தைப் பார்த்து வியந்­த­தா­கத் தெரி­வித்­தார். இப்­போது அந்த ராட்­டி­னத்­தில் இருந்து செங்­காங் கட்டு­மான இடத்­தைப் பார்ப்­பது தனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் அளிப்­ப­தா­க அவர் கூறினார்.

இவர், கடந்த ஒன்­பது ஆண்டு­களாக இங்கு பணி­யாற்றி வரு­கிறார். ராட்­டி­னத்­தில் எட்டு பேர் மட்­டும் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

அந்த மகிழ்­உலா முடிந்­த­தற்­குப் பிறகு பல­ரும் தாங்­கள் எடுத்த புகைப்­ப­டங்­களைப் பகிர்ந்­து­கொண்­ட­னர். தங்­கள் நாடு­களில் உள்­ளோரிடம் பேசி மகிழ்ந்தனர்.

கொவிட்-19 கார­ண­மாக விடுதி­ க­ளி­லேயே முடங்­கிக் கிடந்­து­விட்டு முதன்­மு­த­லாக ஒரு சமூக இடத்­திற்குச் சென்ற அனு­ப­வ­ம் சில ஊழி­யர்­க­ளுக்­குக் கிடைத்­தது.

யாருமே வெளி­யில் வர­மாட்­டார்­கள் என்­ப­தால் விடு­தி­க­ளி­லேயே அடைந்து கிடப்­பது சில நேரங்­களில் பெரும் மன­உ­ளைச்­ச­லா­கி­வி­டும் என்று தெரி­வித்த திரு சர­வ­ணன், 39, என்ற மற்­றொரு கட்­டு­மா­னத் துறை ஊழி­யர், இந்த வாய்ப்பை தங்­க­ளுக்கு வழங்­கிய சிங்­கப்­பூ­ரர்­களுக்கும் சிங்­கப்­பூர் அர­சாங்­கம், தன்­ நிறு­வ­னம் ஆகிய வற்றுக்கும் நன்றி கூறினார்.

நேற்­றைய நில­வ­ரப்­படி 7,178 பற்­றுச்­சீட்­டு­களை வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பயன்­ப­டுத்தி இருந்­த­னர். அவற்­றில் 4,307 சீட்­டு­கள் பொது­மக்­கள் நன்­கொ­டை­யாக அளித்­தவை. 2,871 சீட்­டு­கள் நிறு­வ­னங்­கள் அளித்­தவை. இத்திட்­டத்தை தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன் வர­வேற்­றார்.

ஐஆர்­ஆர் நிறுவனரான திரு­வாட்டி தீபா சுவா­மி­நா­தன், தாங்­கள் அமைச்­சு­ட­னும் இதர பங்­கா­ளி­களு­ட­னும் சேர்ந்து பாது­காப்பு இடை­வெளி போன்ற நிபந்­த­னை­களை முழு­மை­யாக கடைப்­பி­டிப்­பதால் மேலும் பல முத­லா­ளி­கள் ஊழி­யர்­களை அனு­ம­திப்­பார்­கள் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.

ஆர்வமுள்ளவர்கள் ஜூன் 30 வரை https://www.klook.com/en-US/activity/53385-singapore-flyer/ என்ற முகவரியில் சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலா பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கவரும் இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்.