டிரேஸ்டுகெதர், சேஃப்என்ட்ரி தரவுப் பயன்பாடு தொடர்பில் புதிய மசோதா

டிரேஸ் ­டு­கெ­தர், சேஃப்என்ட்ரி தர­வு­களைக் கடு­மை­யான ஏழு வகை குற்­றங்­கள் தொடர்­பான விசா­ர­ணை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்த வகை­செய்­யும் புதிய மசோதா நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து, கொவிட்-19 நோய்ப் பர­வ­லுக்கு எதி­ரான போராட்­டத்­தில் தொடர்­பு­க­ளின் தட­ம­றி­தல் அல்­லது கொலை, பயங்­க­ர­வா­தம் போன்ற கடு­மை­யான குற்­றங்­கள் தவிர்த்து, மற்ற நோக்­கங்­க­ளுக்கு அந்­தத் தர­வு­க­ளைப் பொதுத் துறை அமைப்­பு­கள் பயன்­ப­டுத்த முடி­யாது.

மக்­கள் சென்று வந்த இடங்­கள், பெயர், அடை­யாள எண், தொடர்பு விவரம் போன்ற தனிப்­பட்ட தர­வு­களை இந்­தப் புதிய கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) (சட்­டத்­தி­ருத்­தம்) மசோதா பாது­காக்­கிறது.

சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்முகத்­தின் சார்­பில் வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் இந்த மசோ­தா­வைத் தாக்­கல் செய்­தார்.

அசா­தா­ர­ண­மான சூழ­லில் அர­சாங்­கம் இந்த ­ம­சோ­தா­வைத் தாக்­கல் செய்­துள்­ளது என்று அறி­வார்ந்த தேச, மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கம் நேற்று ஓர் அறிக்கை வாயி­லா­கத் தெரி­வித்­தது.

“தொடர்­பு­க­ளின் தட­ம­றி­த­லைத் திறம்­பட மேற்­கொண்டு, நம்­மை­யும் நம் நாட்­டை­யும் பாது­காக்க, டிரேஸ்­டு­கெ­தர் செயலி அல்­லது கரு­வியை அனை­வ­ரும் பயன்­ப­டுத்தி, வலு­வான ஆத­ர­வைத் தொடர வேண்­டி­யது அவ­சி­யம்,” என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

தனி­ந­பர் தொடர்­பு­க­ளின் தட­ம­றி­தல் தர­வு­களில் எவை­யெல்­லாம் பயன்­ப­டுத்­தப்­படும் என்­பது தொடர்­பி­லான ஐயத்­தைப் போக்­கும் வகை­யில் இந்­தச் சட்­டத்­தி­ருத்­தம் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­க­வும் அந்த அலு­வ­ல­கம் கூறி­யுள்­ளது.

தனி­ந­பர் தொடர்­பு­க­ளின் தட­ம­றி­தல் தர­வு­களை அனு­ம­தி­யின்­றிப் பயன்­ப­டுத்து­வதை அல்­லது வெளி­யி­டு­வதை இம்­மசோதா குற்­ற­மாக வகைப்­ப­டுத்­தி­ உள்­ளது. விதி­மீ­று­வோ­ருக்கு $20,000 வரை அப­ரா­த­மும் ஈராண்டு வரை சிறைத்­தண்­ட­னை­யும் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

முன்­ன­தாக, குற்­ற­வி­யல் நடை­மு­றைச் சட்­டத்­தின்­கீழ், குற்­ற­வி­யல் விசா­ர­ணை­களுக்­காக டிரேஸ்­டு­கெ­தர் தர­வு­கள் உட்­பட சிங்­கப்­பூர் நீதித்­து­றை­யின்­கீழ் எந்­தத் தர­வு­க­ளை­யும் போலிஸ் பெற முடி­யும் என்று உள்­துறை துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் தெரி­வித்து இருந்­தார். இது, தொடர்­பு­க­ளின் தட­ம­றி­த­லுக்கு மட்­டும் டிரேஸ்­டு­கெ­தர் தர­வு­கள் பயன்­ப­டுத்­தப்­படும் என்று கடந்த ஆண்டு அரசாங்கம் தெரிவித்ததற்கு முர­ணாக இருப்­பதாகக் கூறி, கூக்­குரல் கிளம்­பி­யது. அதைத் தொடர்ந்தே, இந்­தப் புதிய மசோதா தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, தொடர்­பு­க­ளின் தட­ம் அ­றி­த­லைத் தொடர்ந்து சிறப்­பாக மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் அதன்­மூ­லமே கொரோனா நெருக்­க­டியை சிங்­கப்­பூர் வெற்­றி­க­ர­மா­கச் சமா­ளிக்க முடி­யும் என்­றும் அறி­வார்ந்த தேச, மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கம் தெரி­வித்துள்ளது.

டிரேஸ்­டு­கெ­தர் மற்­றும் பிற மின்­னிலக்­கத் தொடர்­பு­க­ளின் தட­ம­றி­தல் கரு­வி­கள் மூலம், தொடர்­பு­க­ளின் தட­ம் அ­றி­வ­தற்­கான சரா­ச­ரிக் காலம் நான்கு நாள்­களில் இருந்து ஒன்­றரை நாளா­கக் குறைந்­துள்­ள­தாக அவ்­வ­லு­வ­ல­கம் குறிப்­பிட்­டது.

இது­வரை மக்­கள்­தொ­கை­யில் 80 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் மேற்­பட்­டோர் டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­யைப் பெற்­றுள்­ளனர் அல்­லது அச்­செ­ய­லி­யைப் பதி­விறக்­கம் செய்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!