மூத்த துணை அமைச்சர் ஏமி கோர்: சாப்பிடுவோர் தட்டெடுப்பதால் ஊழியருக்கு வேலை போகாது

பொது உணவகங்களில் சாப்பிடுவோர், தாங்கள் சாப்பிட்ட மேசைகளைத் தாங்களே சுத்தப்படுத்தும் நடைமுறை காரணமாக துப்புரவு ஊழியர்கள் வேலை இழக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று 47 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் நினைக்கிறார்கள்.

பொது சுகாதாரம் பற்றிய தேசிய ஆய்வு மூலம் இது தெரிய வந்துள்ளது. ஆனால் அப்படி நினைப்பது உண்மை அல்ல என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.

உணவகங்களில் தங்கள் மேசையில் இருந்து தாங்கள் சாப்பிட்ட தட்டு முதலானவற்றைத் தாங்களே எடுத்துச் சென்று அவற்றுக்கு உரிய இடங்களில் சேர்க்கும் வேலையை சாப்பிடுவோரே செய்தாலும் உணவு நிலையத்தின் பொது துப்புரவையும் சுகாதாரத்தையும் கட்டிக்காக்க துப்புரவு ஊழியர்கள் தேவைப்படுவார்கள் என்றும் மேசைகளைத் துடைத்து அவற்றை மருந்து தெளித்து சுத்தப்படுத்த வேண்டிய தேவை இருக்கும் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

பார்க்கப்போனால், சாப்பிடுவோரே தங்கள் தட்டுகளை எடுத்துச் சென்று ஒப்படைக்கும் நடைமுறை காரணமாக வேலை இட சூழலின் நலன்கள் மேம்பட உதவி கிடைக்கும் என்று திருவாட்டி ஏமி கோர் தெரிவித்தார்.

அமைச்சர், ஜூரோங் ஈஸ்ட்டில் இருக்கும் யூஹுவா வில்லேஜ் அங்காடி உணவு நிலையம் மற்றும் பிராட்வே காப்பிஷாப் கடைக்கு இன்று சென்றார்.

பொது உணவிடங்களில் சாப்பிடுவோர் துப்புரவில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் தேசிய இயக்கம் ஒன்றை அவர் தொடங்கிவைத்தார்.

தேசிய சுற்றப்புற வாரியம் சென்ற ஆண்டில் நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட 1,402 பேரில் 90 விழுக்காட்டினர் மக்களை இத்தகைய துப்புரவு நடைமுறையில் ஈடுபடுத்த வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்தனர்.

பெரும்பாலான நேரங்களில் தாங்கள் சாப்பிட்ட தட்டு முதலானவற்றைத் தாங்களே உரிய இடத்தில் கொண்டு போய் வைத்துவிடுவதாக 76 விழுக்காட்டினர் கூறினர்.

இருந்தாலும் உணவு அங்காடி நிலையங்களில் சாப்பிட்டவர்களே தட்டுகளைக் கொண்டு வைக்கும் சராசரி அளவு ஏறக்குறைய 30 விழுக்காடாகத்தான் இருக்கிறது.

சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் காணப்படும் இந்த முரண்பாட்டைக் களைவதை நோக்கமாகக் கொண்ட ‘மேசை துப்பரவு இயக்கம்’ சரியான, பொருத்தமான நேரத்தில் இடம் பெறுவதாக இருக்கிறது என்று திருவாட்டி ஏமி கோர் கூறினார்.

உணவகங்களில் சாப்பிடுவோர் பயன்படுத்திவிட்டு மேசையிலேயே விட்டுச் செல்லும் கைத் துடைப்புத்தாட்கள், எச்சம் முதலானவற்றில் கிருமிகள் இருக்கலாம்.

அவை துப்புரவு ஊழியர்களைப் பாதிக்க வாய்ப்புள்ளதால் சாப்பிட்டவர்களே மேசையை சுத்தப்படுத்துவதால் கிருமிப் பரவலைக் கூடுமானவரை குறைத்துவிடலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, இப்போதைய கொவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு பொது சாப்பாட்டு இடங்களில் துப்புரவைக் கட்டிக்காப்பதில் பொதுமக்கள் ஒத்துழைப்பை நாடுவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

மக்கள் பொது இடங்களிலும் தனிப்பட்ட செயல்பாடுகளிலும் சுத்தமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து நடந்துகொள்வதே நோய்த் தடுப்பில் முதல் அரண் என்பதை வாரியம் நினைவூட்டியது.

புதிய இயக்கத்தையொட்டி சிங்கப்பூரில் செயல்படும் 111 உணவு அங்காடி நிலையங்களிலும் சுவரொட்டிகள், காட்சி விளம்பரங்கள், ஒலிபரப்புகள் உள்ளிட்ட பலவும் படிப்படியாக இடம்பெறும்.

இந்த வாரியம், அடித்தள ஆலோசகர்கள், தொண்டூழியர்கள், கல்வி நிலையங்களுடன் சேர்ந்து செயல்பட்டு, சமூகத்தை பெரிய அளவில் எட்டி, உணவு நிலையங்களின் துப்புரவுக்குப் பொறுப்பு ஏற்கும்படி ஊக்கமூட்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!