22 புதிய கொவிட்-19 சம்பவங்கள்; சமூகத்தில் இருவர் பாதிப்பு

22 புதிய கொவிட்-19 சம்பவங்கள்; சமூகத்தில் இருவர் பாதிப்பு

1 mins read
c6ac530f-7d6e-41b2-92db-938b18b3ddff
-

சிங்கப்பூரில் புதிதாக 22 கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இந்நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 59,721க்கு உயர்ந்துள்ளது.

இவற்றில் இரண்டு சமூகத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. மற்ற 20 பேருக்கு வெளிநாட்டில் கிருமித்தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு தனது இன்றைய அறிக்கையில் தெரிவித்தது.

ஊழியர் தங்கும் விடுதியில் எவரும் பாதிக்கப்படவில்லை. மேல் விவரங்கள் இன்று இரவு அறிவிக்கப்படும்.